தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நியூயார்க் ரயில் நிலையத் தாக்குதல்: சந்தேக நபர் அடையாளம்

1 mins read
70fe966d-85c7-4407-9f95-671c11c5c65d
சந்தேக நபரான 62 வயது ஃபிராங்க் ஜேம்ஸை அதிகாரிகள் தேடி வருகின்றனர். படம்: ஈபிஏ -

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் புரூக்லின் ரயில் நிலையத்தில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலின் தொடர்பில் சந்தேத்திற்குரிய ஆடவரை அடையாளம் கண்டுள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபரான 62 வயது ஃபிராங்க் ஜேம்ஸை அதிகாரிகள் தேடி வருகின்றனர்.

நேற்று நிகழ்ந்த இச்சம்பவத்தில் குறைந்தது 23 பேர் காயமடைந்தனர்.

அவர்களில் ஐவர் கவலைக்கிடமாக உள்ளனர்.

காயமடைந்தோரில் 10 பேர் துப்பாக்கியால் சுடப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

சந்தேக நபர் ஃபிராங்க் ஜேம்ஸ் அவர் பெரிய உடல் வாகைக் கொண்டவரென்று சம்பவத்தை நேரில் கண்டவர்கள் காவல்துறையினரிடம் கூறியிருந்தனர்.

ஆரஞ்சு நிற சட்டை, முகக்கவசம், பச்சை நிற தலைக்கவசம், ஆகியவற்றை அணிந்திருந்ததாகவும் அவர்கள் கூறினர்.

சம்பவத்துடன் தொடர்பிருந்ததாகச் சந்தேகிக்கப்படும் வாகனம் ஒன்றை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

அந்த வாகனத்தின் சாவியை சம்பவ இடத்தில் கண்டெடுத்ததாகக் காவல்துறையினர் கூறினர்.