போரிஸ் ஜான்சன் பதவி விலக மறுப்பு

போரிஸ் ஜான்சன் பதவி விலக மறுப்பு

1 mins read
e3c868f9-4d69-49fa-9023-4f650077d1b8
-

லண்­டன்: பிரிட்­ட­னில் பொது முடக்­கக் கட்­டுப்­பா­டு­களை மீறி தமது பிறந்­த­நாள் கொண்­டாட்ட நிகழ்ச்­சி­யில் கலந்­து­கொண்­ட­தற்­காக, அந்­நாட்டு பிர­தமா் போரிஸ் ஜான்­சன் அப­ரா­தம் செலுத்­தி­உள்ளாா்.

இதற்­காக அவர் மீண்­டும் மன்­னிப்பு கோரி­யி­ருப்­பி­னும் பதவி விலக மறுப்பு தெரி­வித்­துள்­ளார்.

இதே விதி­மீ­ற­லுக்­காக போரிஸ் ஜான்­ச­னின் மனைவி கேரி ஜான்­ச­னுக்­கும் அப­ரா­தம் விதிக்­கப்­பட்­டது. அதனை தாம் செலுத்­தி­விட்­ட­தாக அவா் ஏற்­கெ­னவே தெரி­வித்­தி­ருந்தாா்.

போரிஸ் ஜான்­ச­னுக்­கும் அவ­ரின் மனை­விக்­கும் 200 பவுண்டு­கள் அப­ரா­தம் விதிக்­கப்­பட்­டி­ருக்­க­லாம் என­வும் அது பிரிட்­ட­னில் வாகன நிறுத்­தக் கட்­ட­ணத்­தைப் போன்­றது என்­றும் கூறப்­ப­டு­கிறது.

இக்­கொண்­டாட்­டத்­தில் பங்­கேற்ற இந்­திய வம்­சா­வ­ளி­யைச் சோ்ந்த பிரிட்­டன் நிதி­ய­மைச்சா் ரிஷி சுனக்­கிற்­கும் அப­ரா­தம் விதிக்­கப்­பட்­டது.

பிரிட்­ட­னில் முடக்­க­நிலை உத்­த­ரவு நடப்­பில் இருந்­த­போது அவற்றை மீறி, 2020ஆம் ஆண்டு ஜூன் 19ஆம் தேதி நடை­பெற்ற பிறந்­த­நாள் கொண்­டாட்­டத்­தில் அந்­நாட்­டுப் போரிஸ் ஜான்­சன் உட்­பட பலர் கலந்­து­கொண்­ட­தாக எழுந்த குற்­றச்­சாட்டை தொடர்ந்து விசா­ரணை நடத்­தப்­பட்டு பல­ருக்கு அப­ரா­தம் விதிக்­கப்­பட்டு

உள்­ளது.