பிலிப்பீன்சில் 'மெகி' சூறாவளியால் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி மாண்டோர் எண்ணிக்கை 58ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் கூறினர். 100 பேர் காயமடைந்தனர்.
27 பேரைக் காணவில்லை. அவா்களைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா். மத்திய லெய்டே மாநிலத்தின் நான்கு கிராமங்களில் 22 போ் மாண்டனர். வெள்ளம் சூழ்ந்த வீட்டிற்குள் சிக்கியிருந்த சிறுவனை மீட்டு தோளில் சுமந்து வெள்ள நீரைக் கடந்து செல்லும் ஆடவர்.
படம்: ராய்ட்டர்ஸ்

