லண்டன்: முப்பது ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பிரிட்டனில் பணவீக்கம் 7 விழுக்காடாக அதிகரித்துள்ளது.
இதனால் அங்கு வாழ்க்கை செலவினம் மோசமடைந்துள்ளது. இது நாட்டின் பொருளாதார மீட்சி பாதையில் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதாக நிபுணர்கள் கருதுகின்றனர்.
எரிசக்தி விலை
54 விழுக்காடு வரை உயரவுள்ள நிலையில், நெருக்கடி மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் விலை மார்ச் மாதத்தில் மட்டும் 1.1 விழுக்காடு அதிகரித்தது.
ஏப்ரல் மாதத்தில் பணவீக்கம் 8 விழுக்காடு உயரக்கூடும் என்றும் இவ்வாண்டின் பிற்பாதி யில், அது இரட்டை இலக்கத்தைக்கூட எட்டக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் பிரிட்டனின் மத்திய வங்கி கூறியுள்ளது.
"எரிசக்தி சந்தைகளில் நிலவும் உலகளாவிய அழுத்தத்தால், செலவுகள் அதிகரித்து வருவதை நாங்கள் கவனிக்கிறோம்.
"உக்ரேன்-ரஷ்யா சண்டையால் இது மேலும் மோசமடையக்கூடும். எனவே, மக்களின் சுமையை குறைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படுகின்றன," என்றார் பிரிட்டிஷ் நிதியமைச்சர் ரிஷி சுனக்.

