செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
cbf71d6b-beb1-4fb9-bef9-d856acb4abbe
-

டிரக் விபத்தில் 16 பேர் மரணம்

ஜகார்ர்த்தா: இந்தோனீசியாவில் மலைப்பகுதி ஒன்றில் இருந்து இறங்கிய டிரக், குன்றின்மீது மோதியதில் சிறுபிள்ளை உட்பட 16 பேர் மாண்டுவிட்டனர். 12 பேர் காயமடைந்தனர்.

அந்நாட்டின் மேற்கு பப்புவா மாநிலத்தில் உள்ள அர்ஃபக் மலைப் பகுதியின் சாலை வழியாக மனோக்வரிக்கு இறங்கிக் கொண்டிருந்தபோது உள்ளூர் நேரப்படி அதிகாலை 2 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்தது. அதில் ஓட்டுநர் உட்பட 28 பேர் இருந்ததாக காவல்துறையினர் கூறினர்.

பிரேக் செயலிழந்ததால், ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழக்க நேரிட்டிருக்கலாம் என்று காவல்துறை கூறுகிறது. மேலும் அந்த சாலை மிகவும் செங்குத்தானது என்றும் போதிய வெளிச்சமற்ற பகுதி என்றும் கூறப்படுகிறது.

'கொண்டாட்டங்களை புறக்கணியுங்கள்'

கேரன்: மியன்மார் மக்கள் புத்தாண்டு கொண்டாட்டங்களைப் புறக்கணிக்குமாறு ராணுவ ஆட்சிக்கு எதிரான கிளர்ச்சியாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். புத்த பிக்குகளும் சமூக ஆர்வலர்களும் சில இடங்களில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். கிருமிப் பரவல் கட்டுப்பாடு காரணமாக ஆங் சான் ‌‌சூச்சி கைது செய்யப்பட்டது என கடந்த இரண்டு ஆண்டுகளாக அங்கு புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் களையிழந்து காணப்பட்டன.

'தைவானில் தொற்று அதிகரிக்கும்'

தைப்பே: தைவானில் இதுவரையில்லாத அளவுக்கு நேற்று 744 தொற்றுச் சம்பவங்கள் பதிவான நிலையில், இனிவரும் நாள்களில் அது மேலும் அதிகரிக்கும் என்று தைவானின் சுகாதார அமைச்சர் சென் கூறியுள்ளார். ஆனால், எப்போது உச்சமடையும் என்பதைக் கூறமுடியாது என்று அவர் சொன்னார். தொடர்பு தடமறிதல், எல்லைகள் மூடல் என தைவானில் கிருமிப் பரவல் நீண்ட நாள்களாக கட்டுக்குள் இருந்தது. ஆனால், இவ்வாண்டு தொடக்கத்தில் இருந்து தொற்றுக்கு ஆளாவோர் எண்ணிக்கை மெல்ல அதிகரித்து வருகிறது.