'விதிகளை மீறினால் கடுமையாக தண்டிக்கப்படுவீர்'

'விதிகளை மீறினால் கடுமையாக தண்டிக்கப்படுவீர்'

1 mins read
12ebdfe9-00d3-4fc3-99bd-a853fdec726b
-

‌ஷாங்­காய்: ‌கிரு­மிப் பர­வல் விதி­முறை­களை மீறு­வோர் கடு­மை­யா­கத் தண்­டிக்­கப்­ப­டு­வார்­கள் என்று சீனாவின் ‌ஷாங்காய் நகரம் எச்சரித்துள்ளது.

‌ஷாங்காயில் நேற்று 25,000த்திற்கும் மேற்பட்ட தொற்றுச் சம்பவங்கள் பதிவாகின. இந்நிலையில், கிருமிப் பரவலைக் கட்டுக்குள் கொண்டு வர மக்கள் அனைவரும் ஒன்றுபட்ட மனதுடன் போராட வேண்டும் என்று கூறியுள்ளது அந்நகர காவல்துறை.

அத்துடன் மக்கள் பொய் தகவல்களைப் பரப்ப வேண்டாம் என்றும் வெளியில் செல்வதற்காக போலி அனுமதிச் சீட்டுகளைப் பயன்படுத்த வேண்டாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

உணவு விலைகள் அதிகரிப்பதைத் தடுப்பதற்கு அரசாங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருவதாக நகர நிர்வாகம் கூறியது. இதுதொடர்பாக, 38,000 எச்சரிக்கை கடிதங்கள் அனுப்பப் பட்டுள்ளதாக கண்காணிப்பு அமைப்பு ஒன்று கூறியது.