பாரிஸ்: அனைத்துலக காற்பந்துச் சம்மேளனம் எனப்படும் ஃபிஃபா தனது சொந்த மின்னிலக்கத் தளத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.
இதன்மூலம் ஆயிரக்கணக்கான காற்பந்துப் போட்டிகளை ரசிகர்கள் நேரடியாக கண்டுகளிக்கலாம்.
அத்துடன் உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியின் சேமிக்கப்பட்ட காணொளிக் காட்சிகளையும் காணலாம்.
ஃபிஃபா+ என பெயரிடப்பட்டுள்ள இத்தளத்தில், இவ்வாண்டில் 11,000 பெண்கள் போட்டிகள் உட்பட கிட்டத்தட்ட 40,000 போட்டிகளைக் காணலாம் என்று ஃபிஃபா தெரிவித்து உள்ளது.
ஆரம்பக்கட்டத்தில், மாதந்தோறும் 1,400 போட்டிகள் நேரடியாக ஒளிபரப்படும் என்றும் பிறகு அந்த எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கும் என்றும் கூறப்பட்டு உள்ளது.

