ர‌ஷ்ய கடற்படைக்கு பேரிழப்பு

ர‌ஷ்யாவின் போர்க்கப்பலை அழித்துவிட்டதாக கூறுகிறது உக்ரேன்

ஒடீசா: கருங்­க­டல் பகு­தி­யில் இருந்த தமது கடற்­ப­டை­யின் முக்­கிய போர்க்­கப்­பல் ஒன்று மோச­மாக சேத­ம­டைந்­து­விட்­ட­தாக ர‌ஷ்யா தெரி­வித்­துள்­ளது.

மொஸ்­காவா எனும் அந்த ஏவு­கணைத் தாங்கி கப்­ப­லில் தீப்­பற்­றி­ய­தைத் தொடர்ந்து, அது வெடித்­து­விட்­ட­தாக ர‌ஷ்ய தற்­காப்பு அமைச்சு கூறு­கிறது.

ஆனால், தீப்­பற்­றி­ய­தற்­கான கார­ணம் என்­ன­வென்று தெரி­ய­வில்லை என்கிறது ர‌ஷ்யா.

கப்­ப­லில் இருந்த 510 பேர் பத்திரமாக வெளி­யே­றி­விட்­ட­தா­க­வும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

உக்­ரேன் மீதான கடற்­படை தாக்­கு­த­லில், அக்­கப்­ப­ல் பெரும்­பங்கு வகித்­தது. அதில் குறைந்­தது 700 கிலோ­மீட்­டர் தூரம்­வரை பாய்ந்து தாக்­கக்­கூ­டிய 16 ஏவு­கணை எதிர்ப்பு ஆயு­தங்­கள் இருந்­த­தாக ரஷ்யா கூறு­கிறது.

ஏவு­க­ணை­கள், எறி­ப­டை­கள், ஆளில்லா வானூர்­தி­க­ளின் தாக்கு­தல்­க­ளைச் சமா­ளிக்க ரஷ்­யா­வுக்கு அது பெரி­தும் உத­வி­யாக இருந்­தது.

ஆனால் உக்­ரேனோ, தனது 'நெப்­டி­யூன்' ஏவு­க­ணை­கள்­தான் ர‌ஷ்­யா­வின் மொஸ்­காவா கப்­ப­லைத் தாக்கி அழித்­த­தாக கூறு­கிறது.

முன்­ன­தாக, ஸ்நேக் தீவில் உள்ள உக்­ரே­னி­யப் படை­கள், ஆயு­தங்­க­ளைப் போட்­டு­விட்டு சர­ண­டை­யு­மாறு மொஸ்காவா போர்க்­கப்­ப­லில் இருந்து எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்­டது.

ஒரு­போ­தும் அது நடக்­காது என்ற உக்­ரேன்­ப­டை­யி­னரோ, வந்த வழியே திரும்­பிச் செல் என ர‌ஷ்­யப் படைக்­குப் பதி­லடி கொடுத்­த­னர்.

ஸ்நேக் தீவு­களில் உள்ள உக்­ரேன் படை­யி­ன­ரின் தாக்­கு­த­லில் மொஸ்­காவா கப்­பல் அழிக்­கப்­பட்­ட­தாக உக்­ரே­னின் ஒடீசா மாநில ஆளு­நர் சொன்­னார்.

அமெ­ரிக்காத் தலை­மை­யி­லான ராணு­வக் கூட்­ட­ணி­யில், ஃபின்லாந்து, சுவீ­டன் நாடு­கள் இணைந்­தால், தனது தற்­காப்பை வலுப்­ப­டுத்த, ர‌ஷ்யா அணு­வா­யு­தங்­க­ளைப் பயன்­ப­டுத்த வேண்­டி­யி­ருக்­கும் என்று ர‌ஷ்ய அதி­பர் புட்­டி­னுக்கு நெருக்­க­மா­ன­வ­ரும் ர‌ஷ்ய பாது­காப்பு மன்­றத்­தின் துணைத் தலை­வ­ரு­மான டிமெட்ரி மெட்­வேவ் நேட்­டோவை எச்­ச­ரித்து உள்­ளார்.

ஃபின்லாந்­தும் சுவீ­ட­னும் நேட்­டோ­வில் இணை­வது குறித்து பரி­சீ­லித்து வரு­கின்­றன.

இந்­நா­டு­கள் நேட்­டோ­வில் இணைந்­தால், பால்­டிக் கட­லில் ர‌ஷ்யா தனது ராணுவ நட­வ­டிக்­கையைப் பலப்­ப­டுத்­தும் என்று அது எச்­ச­ரித்­துள்­ளது.

இதற்­கி­டையே, ஜப்­பான் கட­லில் ர‌ஷ்ய நீர்­மூழ்­கிக் கப்­பல் ஏவு­கணை ஒன்றை செலுத்­தி­யுள்­ளது பதற்­றத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!