பெட்டாலிங் ஜெயா: பக்கத்தான் ஹரப்பான் மலேசியாவில் மீண்டும் ஆட்சியைப் பிடிக்க 10 ஆண்டுகள் பிடிக்கும் என்றும் அது அடுத்த இரண்டு பொதுத் தேர்தல்களில் தோல்வியைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்றும் கூறியுள்ளார் மலேசிய எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிமின் மகள் நூருல் இஸா.
பக்கத்தானுக்கு எதிர்வரும் ஆண்டுகள் சவால்மிக்கதாக இருக்கும் என்றும் நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்களில் அது தோல்வியைச் சந்திக்கும் எனவும் அவர் சொன்னார்.
மலாக்கா, ஜோகூர் தேர்தல்களில் கிடைத்த அமோக வெற்றியால், அம்னோவும் பாரிசான் நேஷனலும் அதீத நம்பிக்கையில் இருந்துவிடக்கூடாது என்பதையும் அவர் குறிப்பிட்டார்.

