மட்ரிட்: அலட்லெட்டிகோ மட்ரிட் காற்பந்துக் குழுவைக் கோல் போட விடாமல் தடுத்து, 0-1 என்ற ஒட்டுமொத்த கோல்கணக்கில் சாம்பியன்ஸ் லீக்கின் அரையிறுதிக்கு முன்னேறியது மான்செஸ்டர் சிட்டி.
நேற்று நடந்த இரண்டாவது சுற்று ஆட்டத்தில் நேர்த்தியாக விளையாடியது சிட்டி. ஏற்கெனவே ஒரு கோல் பின்தங்கிய நிலையில் களமிறங்கிய அட்லெட்டிகோவோ, கோல் போட்டுவிட வேண்டும் என்ற முனைப்புடன் இருந்தது.
குன்டோகன் உதைத்த பந்து, கோல்கம்பத்தை உரசாமல் வலைக்குள் சென்றிருந்தால், சிட்டியின் வெற்றி சற்று எளிதாக இருந்திருக்கும்.
அதேசமயம், அட்லெட்டிகோவின் ஃபிலிப்பே சிட்டியின் ஃபில் போடனின் முரட்டுத்தனமாக நடந்து கொண்டதற்காக இரண்டு முறை மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டு ஆட்டத்தைவிட்டு வெளியேற்றப்பட்டார்.
இதனால், காயமடைந்து ரத்தம் வடிந்த போடனின் தலையில் கட்டு போடப்பட்டிருந்தது.
வரும் 27, அடுத்த மாதம் 5ஆம் தேதகளில் நடைபெறவுள்ள அரையிறுதி ஆட்டங்களில் ரியால் மட்ரிட்டுடன் மோதவுள்ளது மான்செஸ்டர் சிட்டி.
அரையிறுதி ஆட்டம் சிட்டிக்கு எளிதானதாக இருக்காது. ஏனெனில், காயம் காரணமாக இரண்டாவது சுற்று ஆட்டத்தில் பங்கேற்காத கெவின் டி பிரய்ன எப்போது குழுவிற்குத் திரும்புவார் என்று தெரியவில்லை. போதாதற்கு, நேற்றைய ஆட்டத்தின்போது கைல் வாக்கரும் காயமடைந்தார்.
மற்றோர் ஆட்டத்தில் 6-4 என்ற ஒட்டுமொத்த கோல்கணக்கில் பென்ஃபிகாவை வீழ்த்திய லிவர்பூல், அரையிறுதியில் வில்லா ரியாலை எதிர்கொள்கிறது.
இம்மாதம் 27ஆம் தேதியும் மே மாதம் 4ஆம் தேதியும் இக்குழுக்கள் மோதுகின்றன.
நேற்றைய இரண்டாவது சுற்று ஆட்டத்தில், லிவர்பூலின் கோல்களுக்கெல்லாம் பதில் கோல் போட்டு ஆட்டத்தைச் சமன் செய்தது பென்ஃபிகா. எனவே 3-3 என்ற கோல்கணக்கில் ஆட்டம் சமநிலை கண்டது.

