தென்னாப்பிரிக்காவின் கடற்கரை நகரமான டர்பன், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் 60 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெய்த கனமழை பேரழிவை ஏற்படுத்தி உள்ளது. கனமழை, நிலச்சரிவு ஆகியவற்றில் சிக்கி குறைந்தது 341 பேர் மாண்டுவிட்டதாக அந்நாட்டு அரசாங்கம் கூறியுள்ளது. காணாமல் போனவர்களைத் தேடும் பணிகள் தீவிரமாக நடந்து வருவதாக அந்நாட்டு அதிபர் சிரில் ரமபோசா தெரிவித்துள்ளார். பருவநிலை மாற்றமே இந்த மோசமான பாதிப்பிற்கு காரணம் என்ற அதிபர், அதனைத் தடுப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளைச் செயல்படுத்துவதில் காலதாமதம் கூடாது என்றும் சொன்னார். டர்பனில் உள்ள உம்டோல்டி கடற்கரை பகுதியில் பெய்த கனமழையைத் தொடர்ந்து இடிந்து விழுந்த கட்டடங்கள்.
படம்: ஏஎஃப்பி

