இஸ்லாமாபாத்: ஆயுதம் ஏந்திய கொள்ளை கும்பல் ஒன்று பாகிஸ்தானின் கராச்சி நகரில் உள்ள வங்கி ஒன்றில் பாகிஸ்தான் ரூபாய் 2 மில்லியனைக் கொள்ளையடித்து சென்றுவிட்டதாக அந்நாட்டு காவல்துறை தெரிவித்துள்ளது.
உள்ளூர் நேரப்படி காலை 11:09 மணியளவில் வங்கிக்குள் நுழைந்த ஆயுதம் ஏந்திய கொள்ளை கும்பல், அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த வங்கி காவலர்களையும் வங்கி ஊழியர்களையும் தாக்கி துப்பாக்கி முனையில் பிணைக் கைதிகளாக பிடித்து வைத்துக்கொண்டு பணத்தைக் கொள்ளையடித்தனர்.
அத்துடன், வங்கிக் காவலர்களின் ஆயுதங்களையும் கொள்ளையர்கள் எடுத்துச் சென்று விட்டனர்.
தகவல் அறிந்து வங்கிக்கு வந்த காவல்துறையினர் கொள்ளைச் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

