கோலாலம்பூர்: தேசிய முன்னணி கட்சியின் தலைவராக இஸ்மாயில் சப்ரி யாக்கோப் நியமிக்கப்படுவதற்கான நேரம் வந்துவிட்டதாக அன்வார் மூசா தெரிவித்துள்ளார். அதோடு தேசிய முன்னணியின் தேர்தல் இயக்குனராகவும் இஸ்மாயில் சப்ரி நியமிக்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார். இது, பொதுத் தேர்தலுக்கு தேசிய முன்னணியை தயார்படுத்துவதற்கும் அதற்கான செயல்திட்டத்தை வரைவதற்கும் சரியானதாக இருக்கும் என்றார் அவர்.
முன்னதாக, வரும் பொதுத்தேர்தலிலும் இஸ்மாயில் சப்ரி யாக்கோப்பை, பிரதமர் வேட்பாளராக அறிவிக்க அம்னோ ஒருமனதாக பரிந்துரைத்துள்ளது. அதே சமயம் பொதுத் தேர்தலுக்குப் பிறகே கட்சித் தேர்தல், நடத்தப்படும் என்றும் உறுதிபடுத்தப்பட்டது.

