கிருமிப் பரவல் கட்டுப்பாடுகளை தளர்த்துகிறது தென்கொரியா

கிருமிப் பரவல் கட்டுப்பாடுகளை தளர்த்துகிறது தென்கொரியா

1 mins read
35bffbb2-b3bc-492b-b8bf-6acc139afe4d
-

சோல்: தென்கொரியாவில் பெரும்பாலான கிருமிப் பரவல் கட்டுப்பாடுகள் அடுத்த வாரத்தில் தளர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வரும் 18ஆம் தேதி முதல் நள்ளிரவில் உணவகங்களில் உணவருந்துவதற்கான தடை நீக்கப்படுகிறது. அதே சமயம் முகக்கவசம் அணிவது தொடர்ந்து நடப்பில் இருக்கும்.

பொது இடங்களில் 10 பேருக்கு மேல் ஒன்றுகூடக்கூடாது என்ற தடை நீக்கப்படுவதாக அந்நாட்டின் பிரதமர் கிம் பூ-கியூம் சொன்னார்.

வெளியிடங்களில் முகக்கவசம் அணிவதற்கான கட்டாயம் குறித்து இரண்டு வாரங்களில் முடிவு செய்யப்படும் என்றும் அவர் சொன்னார்.