சிட்னி: ஆஸ்திரேலியா வில், நேற்று
40 ஆயிரம் பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், 34 பேர் மாண்டு விட்டனர்.
கடந்த ஒரு வாரமாக ஆஸ்திரேலியாவில் நாளொன்றுக்குச் சராசரியாக 49 ஆயிரம் பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும் அவர்களின் சராசரி வயது 30ஆகவும் மாண்டவர்களின் சராசரி வயது 83ஆகவும் உள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
இதுவரை அந்நாட்டில் 69 விழுக்காட்டினர் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்.
இதற்கிடையே, தெற்கு ஆஸ்திரேலியா மாநிலத்தில் நேற்று முதல் கிருமிப் பரவல் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. இதனையடுத்து, வெளியடங்களில் மக்கள் இனி முகக்கவசம் அணிய வேண்டியதில்லை.

