குடியிருப்பில் தனிமைப்படுத்தல்;‌ ஷாங்காயில் ஆர்ப்பாட்டம்

குடியிருப்பில் தனிமைப்படுத்தல்;‌ ஷாங்காயில் ஆர்ப்பாட்டம்

1 mins read
b2326b8f-bc84-4081-b946-6d15b675867f
ஷாங்காய் நகர குடியிருப்பு வளாகம் ஒன்றினுள் அமைந்துள்ள உடற்பயிற்சிக் கூடம் தனிமைப்படுத்தல் மையமாக மாற்றப்பட்டு உள்ளது‌. படம்: ஏஎஃப்பி -

‌ஷாங்­காய்: குடி­யி­ருப்­புக் கட்­ட­டங்­கள் தனி­மைப்­ப­டுத்­தல் மையங்­க­ளாக மாற்­றப்­பட்­ட­தால் கோப­ம­டைந்த அப்­ப­குதி மக்­கள் ஆர்ப்­பாட்­டத்­தில் ஈடு­பட்­ட­னர். தங்­க­ளுக்கு கிருமி தொற்­று­வ­தற்கு அதிக வாய்ப்­புள்­ள­தா­க­வும் அவர்­கள் கவலை தெரி­வித்­த­னர்.

சீன சமூக ஊட­கத்­தில் நேரடி­யாக ஒளிப­ரப்­பான காணொளி ஒன்­றில், ஆர்ப்­பாட்­டத்­தில் ஈடு­பட்­ட­வர்­களில் ஒரு­வ­ரைக் காவல்­து­றை­யி­னர் அழைத்­துச் செல்­வ­தைக் காண முடிந்­தது. கிட்­டத்­தட்ட 10,000 பேரால் பார்க்­கப்­பட்ட அந்த காணொளி, அத்­த­ளத்­தில் இருந்து அகற்­றப்­பட்­டது.

"நம் கட்­ட­டத்­திற்கு 10 மீட்­டர் தூரத்­தில் இருக்­கும் இன்­னோர் கட்­ட­டத்­தில் அனை­வ­ரும் கிரு­மித்­தொற்­றுக்கு ஆளா­ன­வர்­க­ளாக இருப்­பது நமக்கு அச்­சம் தரு­வ­தாக இருக்­கும்," என்­றார் பெயர் வெளி­யிட விரும்­பாத அப்­ப­கு­தி­யில் வசிக்­கும் பெண் ஒரு­வர்.

காலி­யாக உள்ள தனது ஐந்து கட்­ட­டங்­க­ளைத் தனி­மைப்­ப­டுத்­தும் மையங்­க­ளாக மாற்­றி­யுள்­ள­தா­க­வும் மேலும் ஒன்­பது கட்­ட­டங்­களை அது­போல் மாற்­ற­வேண்­டும் என்று அதி­கா­ரி­கள் உத்­த­ர­விட்­டுள்­ள­தாக குறிப்­பிட்ட கட்­ட­டத்­தின் உரி­மை­யா­ள­ரான ஜாங்­ஜி­யாங் குழு­மம் சொன்­னது.

அக்­கட்­ட­டங்­களில் இருந்த 39 வாட­கை­தா­ரர்­க­ளுக்கு உரிய இழப்­பீடு கொடுத்து வேறு பகு­தி­க­ளுக்கு அனுப்­பி­ய­தா­க­வும் அது சொன்­னது.

இது­கு­றித்து, ‌ஷாங்­காய் அர­சாங்­கம் எந்­தக் கருத்­தும் தெரி­விக்­க­வில்லை.