மூன்றாம் உலகப்போர் தொடங்கிவிட்டது என அறிவித்த ர‌ஷ்ய ஊடகம்

மூன்றாம் உலகப்போர் தொடங்கிவிட்டது என அறிவித்த ர‌ஷ்ய ஊடகம்

1 mins read
5ab545c6-5268-44bc-8a31-4ca2ba846781
படம்: ராய்ட்டர்ஸ் -

ர‌ஷ்ய தொலைக்காட்சி ஊடக நிறுவனம் ஒன்று தற்போது நடப்பது மூன்றாம் உலகப்போர் என அறிவித்தது.

"இத்தனை நாட்களாக நடந்து வரும் போர் உக்ரேனுக்கு எதிரான போர் இல்லை, நேட்டோ நாடுகளுக்கு எதிரான போர். மாஸ்கோவா கப்பல் மூழ்கியதற்கு பின் இந்த போர் தீவிரமடைந்திருப்பதை நாம் நிச்சயம் மூன்றாம் உலகப்போர் என்று தான் அழைக்க வேண்டும்," என்று 'ரஷ்யா 1' தொலைக்காட்சி நிறுவனம் அறிவித்தது.

ர‌ஷ்ய-உக்ரேன் போர் 52 வது நாள்களாக நடைபெற்று வருகிறது. இந்த போரில் கருங்கடல் பகுதியில் ர‌ஷ்யாவின் முக்கிய போர்க்கப்பலான மொஸ்க்வா வெடிமருந்துகள் வெடித்து தீப்பற்றியதாக ர‌ஷ்யா தெரிவித்திருந்தது.

மேலும் கப்பல் துறைமுகத்திற்கு செல்லும் வழியில் சூறாவளியில் சிக்கி கடலில் மூழ்கியதாகவும், அதில் பயணித்தவர்கள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் தகவல் தெரிவித்தது.

ஆனால் உக்ரேன் ராணுவமோ தனது நெப்டியூன் ஏவுகணைதான் மாஸ்கோவின் கருங்கடல் கடற்படையின் முதன்மைக் கப்பலான மொஸ்க்வாவை தாக்கி அழிதத்தது என கூறி வருகிறது.