அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள சுரங்க ரயில் நிலையத்தில் இந்த வாரம் அரங்கேறிய துப்பாக்கிச்சூடு சம்பவத்தின் தொடர்பில் சந்தேக ஆடவர் பற்றி முக்கியத் தகவல் அளித்த ஐவர், US$50,000 (S$67,870) வெகுமதியைப் பகிர்ந்துகொள்வர் என நியூயார்க் காவல்துறை அறிவித்துள்ளது.
காவல்துறையின் 30 மணி நேர தேடுதல் வேட்டைக்குப் பிறகு, ஃபிராங்க் ஜேம்ஸ், 62, எனும் அந்த கறுப்பின ஆடவர் லோவர் மேன்ஹட்டனில் கடந்த புதன்கிழமை கைது செய்யப்பட்டார். அவர் இருந்த இடத்தைக் கண்டறிய பொதுமக்கள் அளித்த தகவல்கள் பெரிதும் உதவியாக காவல்துறை தெரிவித்தது.