மீண்டும் பறக்கத் தொடங்கியது போயிங் 787-800

மீண்டும் பறக்கத் தொடங்கியது போயிங் 787-800

1 mins read
1993a5f3-581c-4a12-aae2-9a2a3f3e3f89
-

பெய்ஜிங்: சைனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் போயிங் 737-800 ரக விமானங்களை வர்த்தகப் பயணங்களுக்கு மீண்டும் பயன்படுத்தத் தொடங்கி உள்ளதாக விமானக் கண்காணிப்பு இணையத் தளத்தின் தரவு கூறுகின்றது.

சனிக்கிழமையன்று சோதனை ஓட்டத்தை நிறைவு செய்த அந்த விமானம், செங்குடுவில் இருந்து குன்மிங் நகரத்திற்குப் புறப்பட்டதாக ஃபிளைட்ரேடார்24 கூறுகிறது.

மற்றொரு விமானத்தின் சோதனை ஓட்டம் ஞாயிற்றுக்கிழமையன்று ‌ஷாங்காயில் நடைபெற்றதாக வும் கூறுகிறது அத்தகவல்.

இதே ரக விமானம் ஒன்று 132 பேருடன் மலைக்குன்றில் விழுந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த அனைவரும் மாண்டுவிட்டனர். இச்சம்பவம் நடந்து ஒரு மாதம்கூட (மார்ச் 21) ஆகாத நிலையில், அதே ரக விமானம் மீண்டும் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.