அரசியல் கட்சி ஒன்று நடத்திய ஆர்ப்பாட்டங்களில் சுவீடனின் ஸ்டாக்ஹோம், நார்கோப்பிங் போன்ற நகரங்களில் வியாழன் முதல் வன்முறை வெடித்தது. ஸ்ட்ராம் குரஸ் எனும் அக்கட்சியினர் இஸ்லாத்தின் புனித நூலான குர்ஆனை எரிக்கத் திட்டமிட்டிருந்ததைத் தொடர்ந்து சனிக்கிழமை இரவு சுவீடனின் லன்ட்ஸ்கோர்னா பகுதியில் கிட்டத்தட்ட 100 பேர் வன்முறையில் ஈடுபட்டதாக காவல்துறை தெரிவித்தது. அவர்கள் கல்வீச்சு, வாகனங்கள் மற்றும் குப்பைத் தொட்டிகளுக்குத் தீவைத்தல் என சமூக விரோத செயல்களில் ஈடுபட்டனர். பிறகு அங்கு நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. படம்: ராய்ட்டர்ஸ்
சுவீடனில் தொடரும் வன்முறை; கல்வீச்சு, வாகனங்கள் எரிப்பு
1 mins read
-

