தொழிற்சாலைகளை மீண்டும் தொடங்க ‌ஷாங்காய் திட்டம்

தொழிற்சாலைகளை மீண்டும் தொடங்க ‌ஷாங்காய் திட்டம்

1 mins read
965b9a79-ddfc-434e-9a6f-2fd0c2bfc32f
-

ஷாங்­காய்: சீன பொரு­ளா­தா­ரத்­தில் பலத்த அடியை ஏற்­ப­டுத்­திய ‌ஷாங்­காய் முடக்­க­நிலைக்கு மத்­தி­யில், அங்­குள்ள தொழிற்­சாலை­களில் மீண்­டும் உற்­பத்­தி­யைத் தொடங்­கு­வ­தற்­கான திட்­டங்­களை சீனா வெளி­யிட்­டுள்­ளது.

இதன்­படி, ஊழியர்­கள் தொழிற்­சாலை­களி­லேயே தங்­கு­வது, அவர்­க­ளுக்­குத் தொடர் பரி­சோ­த­னை­கள் மேற்­கொள்­வது போன்­ற­வற்­றுக்கு நிறுவனங்கள் திட்­ட­மிட வேண்­டும்.

அத்­து­டன் மீண்­டும் உற்­பத்­தியை தொடங்­கு­வ­தற்கு கொவிட்-19 கட்­டுப்­பாட்டு அதி­கா­ரி­க­ளின் ஒப்­பு­த­லைப் பெற வேண்­டும் என்று ஷாங்­காய் பொரு­ளா­தார, தக­வல் தொழில்­நுட்ப ஆணை­யத்­தின் அறிக்­கை­யில் கூறப்­பட்­டுள்ளன.

இதற்­கி­டையே, வரும் புதன்­கி­ழ­மைக்­குள் தனி­மைப்­ப­டுத்­தல் பகு­தி­க­ளுக்கு வெளியே கிரு­மிப் பர­வு­வ­தைத் தடுக்க ‌‌ஷாங்­காய் இலக்கு நிர்­ண­யித்­துள்­ள­தாக அது­பற்றி நன்கு அறிந்­த­வர்­கள் கூறி­னர்.

எனவே, கிரு­மித்­தொற்றுப் பரி­சோ­த னையை அதி­கப்­ப­டுத்தி, தொற்று உறுதி செய்­யப்­பட்­ட­வர்­க­ளைத் தனி­மைப்­ப­டுத்­தல் மையங்­களுக்கு மாற்­றும் நட­வ­டிக்கை தீவி­ரப் படுத்தப்­பட்­டுள்­ளது.

ஷாங்­கா­யின் பல்வேறு பகுதிகளில் மூன்று வார கால­மாக முடக்­க­ப்பட்டு உள்ளன.