தீவிரவாத தாக்குதலைத் தடுக்க தலிபானிடம் பாகிஸ்தான் வலியுறுத்து

தீவிரவாத தாக்குதலைத் தடுக்க தலிபானிடம் பாகிஸ்தான் வலியுறுத்து

1 mins read
d08192e6-8358-435e-af21-784d6f769ede
-

இஸ்­லா­மா­பாத்: ஆப்­கா­னிஸ்­தான் பகு­தி­களில் இருந்து பாகிஸ்­தான்­மீது நடத்­தப்­படும் தீவி­ர­வாதத் தாக்கு­தல்­க­ளுக்கு எதி­ராக கடு­மை­யான நட­வ­டிக்கை எடுக்­கப்­பட வேண்­டும் என்று தலி­பான் அர­சாங்­கத்தை பாகிஸ்­தான் கேட்­டுக்­கொண்­டு உள்ளது.

இரு நாடு­களும் ஏறத்­தாழ 2,700 கிலோ மீட்­டர் தூரத்­திற்கு எல்­லையை பகி­ரும் நிலை­யில், தலி­பான் இயக்­கம் ஆப்­கா­னிஸ்­தான் அர­சாங்­கத்­தைக் கைப்­பற்­றி­ய­தில் இருந்து இரு நாடு­க­ளுக்­கும் இடையே தொடர்ந்து பதற்­றம் நில­வு­கிறது.

முன்­ன­தாக, ஆப்­கா­னிஸ்­தா­னின் குனார் மாநி­லத்­தின் ஹெல்­டன் மாவட்­டத்­தில் பாகிஸ்­தான் ராணு­வம் மேற்­கொண்ட ஏவு­க­ணைத் தாக்­கு­த­லில் ஐந்து பிள்­ளை­கள், ஒரு பெண் என ஆறு பேர் கொல்­லப்­பட்­டது பதற்­றத்தை மேலும் அதி­க­ரித்­துள்­ளது. இந்தத் தாக்கு­தல் குறித்து, பாகிஸ்­தான் ராணு­வம் எது­வும் கூற­வில்லை.

இதற்கு கண்­ட­னம் தெரி­வித்­துள்ள தலி­பான் அரசு, மீண்­டும் தாக்­கு­தல் நடத்­தி­னால் பதி­லடி கொடுப்­போம் என அறி­வித்­துள்­ளது.

இதுபோன்ற தாக்குதல் இரு நாடுகளுக்கு இடையே பகைமையை உருவாக்கும் எனவும் அதன் காரணமாக போர் தொடங்­கி­னால் அது எந்­தத் தரப்புக்­கும் நன்மை பயக்­காது என்­பதை பாகிஸ்­தான் தரப்பு அறிந்துகொள்ள வேண்­டும் எனவும் ஆப்­கா­னிஸ்­தான் எச்­ச­ரித்­து உள்ளது.

சென்ற வியா­ழன் அன்று ஆப்­கா­னிஸ்­தா­னில் இருந்து செயல்­படும் தீவி­ர­வாதி­களின் தாக்­கு­த­லில், பாகிஸ்­தா­னின் வடக்கு வஜி­ரிஸ்­தான் மாவட்­டத்­தில் ஏழு பாகிஸ்­தான் வீரர்­கள் கொல்­லப்­பட்­ட­தாக அந்­நாடு கூறி­யது.