திருக்குர்ஆனை எரிக்கத் திட்டம்; மிகக் கடுமையான எதிர்ப்பலை

திருக்குர்ஆனை எரிக்கத் திட்டம்; மிகக் கடுமையான எதிர்ப்பலை

2 mins read
e5af391a-5ba6-46fa-aa53-ae5c7edc759b
-

ஸ்டோக்­ஹம்: முஸ்­லிம்­க­ளின் புனித திருக்­குர்­ஆனை எரிக்க சுவீ­ட­னைச் சேர்ந்த வல­து­சா­ரி­கள் திட்­ட­மிட்­டுள்­ளதை அடுத்து, அது­கு­றித்து அந்­நாட்­டில் மிகக் கடு­மை­யான எதிர்ப்­பலை உரு­வா­கி­

உள்­ளது.

கடந்த வார­யி­றுதியில் வல­து­சா­ரி­களை எதிர்த்து நடை­பெற்ற ஆர்ப்­பாட்­டங்­க­ளில் வன்­முறை வெடித்­தது. ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்­

க­ளுக்­கும் காவல்­து­றை­யி­ன­ருக்­கும் இடையே கைக­லப்பு மூண்­டதை அடுத்து 26 பேர் கைது செய்­யப்பட்டனர்.

கடந்த நான்கு நாள்­களில் இரண்­டா­வது முறை­யாக இரு நக­ரங்­களில் வன்­முறை வெடித்­தது. வல­து­சாரி அர­சி­யல்­வாதி ரஸ்­முஸ் பலு­டான் தலை­மை­யில் நடை­பெற்ற குடி­யே­றி­கள் எதிர்ப்பு, இஸ்­லா­மி­யர்­கள் எதிர்ப்பு பேர­ணி­களை எதிர்த்து ஆர்ப்­பாட்­டங்­கள் நடை­பெற்­றன. கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை நிகழ்ந்த மோத­லின்­போது ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்­க­ளுக்கு எச்­ச­ரிக்கை விடுக்­கும் வகை­யில் துப்­பாக்­கி­யால் சுட்­ட­தாக காவல்­துறை கூறி­யது.

அதில் மூவர் காய­ம­டைந்­த­தாக தெரி­விக்­கப்­பட்­டது.

வழக்­க­றி­ஞ­ரும் சொந்த யூடி­யூப் ஒளி­வழி வைத்­தி­ருப்­ப­வ­ரு­மான திரு பலு­டான், வரும் செப்­டம்­பர் மாதம் சுவீ­ட­னில் நடை­பெற உள்ள சட்­ட­மன்­றத் தேர்­த­லில் போட்டியிட விருப்­பம் தெரி­வித்­துள்­ளார்.

ஆனால் வேட்­பு­மனுத் தாக்­கல் செய்­யத் தேவை­யான ஆத­ர­வுக் கையெ­ழுத்­து­களை அவர் இன்­னும் பெற­வில்லை.

எனவே அவற்­றைப் பெறு­வதற்­காக அவர் சுவீ­டன் முழு­வ­தும் ஆத­ரவு திரட்டி வரு­கி­றார்.

இஸ்­லா­மி­யர்­கள் பலர் வசிக்­கும் குடி­யி­ருப்­புப் பகு­தி­க­ளுக்­குச் செல்­லும் 40 வயது திரு பலு­டான், அங்கு அவர்­கள் முன் திருக்­குர்­ஆன் பதிப்புகளை எரிக்­கத் திட்­ட­மிட்­டுள்­ளார். முஸ்­லிம்­கள் நோன்பு கடைப்

பிடிக்­கும் ரம­லான் மாதத்­தில் அவர் இவ்­வாறு செய்­வது குறிப்­பி­டத்­தக்­கது. கடந்த சனிக்­கி­ழ­மை­யன்று மால்மோ நக­ரில் திருக்­குர்­ஆன் பதிப்பு ஒன்­றுக்கு அவர் தீயிட்­டார்.

திரு பலு­டா­னின் இச்­செ­யல்­

க­ளி­னால் கடந்த சில நாள்­க­ளாக சுவீ­ட­னெங்­கும் காவல்­து­றை­யி­ன­ருக்­கும் ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்­க­ளுக்­கும் இடையே மிகக் கடு­மை­யான மோதல்­கள் ஏற்­பட்டு வரு­கின்­றன.

கடந்த வியா­ழக்­கி­ழமை,

வெள்­ளிக்­கி­ழமை ஆகிய நாள்களில் நிகழ்ந்த மோத­லில் ஏறத்­தாழ 12 காவல்­துறை அதி­கா­ரி­கள் காய­முற்­ற­னர். இதற்­கி­டையே, சுவீ­ட­னின் தூதரை அழைத்து தனது

அதி­ருப்­தியை ஈராக்­கிய அர­சாங்­கம் பதிவு செய்­துள்­ளது.

திருக்­குர்­ஆன் எரிக்­கப்­பட்­டால் அதற்­கான பின்­வி­ளை­வு­களை சுவீ­டன் எதிர்­கொள்ள வேண்­டி­வ­ரும் என்று அது எச்­ச­ரித்­தது.

முஸ்­லிம் நாடு­க­ளுக்­கும் சுவீ­ட­னுக்­கும் இடை­யி­லான உற­வில் விரி­சல் ஏற்­படும் என்று தெரி­விக்­கப்­பட்­டது.