ஷாங்காயில் கொவிட்-19 மரணங்கள்

ஷாங்­காய்: கொவிட்-19 கிரு­மித்­தொற்று கார­ண­மாக சீனா­வின் ஷாங்­காய் நக­ரில் மூவர் மாண்­டு­விட்­ட­னர்.

சீனா­வைத் தற்­போது உலுக்­கும் கொவிட்-19 அலை­யில் ஷாங்­கா­யில் கிரு­மித்­தொற்று கார­ண­மாக முதல்­மு­றை­யாக மர­ணம் ஏற்­

பட்­டுள்­ளது.

நேற்று மாண்­ட­வர்­கள் 89 வய­துக்­கும் 91 வய­துக்­கும் இடைப்­பட்­ட­வர்­கள். அவர்­கள் அனை­வ­ரும் ஏற்­கெ­னவே வேறு நோய்­க­ளால் பாதிக்­கப்­பட்­டி­ருந்­த­னர்.

கடந்த மாதம் நடுப்­ப­கு­தி­யில் சீனா­வின் வட­கி­ழக்கு மாநி­ல­மான ஜிலி­னில் கிரு­மித்­தொற்று கார­ண­மாக இரு­வர் மாண்­ட­னர்.

சீனா­வில் கிட்­டத்­தட்ட ஓராண்டு இடை­வெ­ளிக்­குப் பிறகு இந்த கொவிட்-19 மர­ணங்­கள் ஏற்­பட்­டுள்­ளன. கொவிட்-19 கிரு­மித்­தொற்று அறவே இல்­லாத நிலையை எட்ட சீனா தீவிர முயற்­சி­களை மேற்­கொண்டு வரு­கிறது.

முத­லில் அதன் முயற்­சி­கள் பலன் அளித்­தன. ஆனால் டெல்டா, ஓமிக்­ரான் கிருமி வகை பர­வத் தொடங்­கி­ய­தும் சீனா­வுக்கு மிகக் கடு­மை­யான சவால்­கள் ஏற்­பட்­டுள்­ளன. நேற்று முன்­தி­னம் மாண்ட மூவ­ரைப் பற்­றிய தக­வல்­கள் அதி­கா­ர­பூர்­வ­மாக அறி­விக்­கப்படுவதற்கு முன்பு அது­தொ­டர்­பான செய்­தி­கள் வெளியே கசிந்­த­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

ஷாங்­கா­யில் உள்ள இரண்டு மூத்­தோர் பரா­ம­ரிப்பு இல்­லங்­களில் கிரு­மிப் பர­வல் ஏற்­பட்­டுள்ளதா­க­வும் அதைக் கட்­டுக்­குள் கொண்டு­ வர அதி­கா­ரி­கள் படா­த­பாடு பட்டு வரு­வ­தா­க­வும் தெரி­விக்­கப்­பட்­டது.

ஷாங்­கா­யில் தற்­போது ஓமிக்­ரான் கிருமி வகை மள­ம­ள­வெனப் பரவி வரு­கிறது. பச்­சி­ளங்

குழந்­தை­யி­லி­ருந்து மூத்­தோர் வரை பாதிக்­கப்­பட்­டுள்­ள­தாகத் தெரி­விக்­கப்­பட்­டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!