பெட்டாலிங் ஜெயா: மலேசியாவில் அறிவுத்திறன் குன்றிய 13 வயது சிறுமி, உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் துன்புறுத்தப்பட்ட சம்பவம் அந்நாட்டினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதுகுறித்து ஜோகூர் சுல்தானும் கவலை தெரிவித்தார்.
ரூமா போன்டா நல்வாழ்வு இல்லத்தின் நிறுவனரான 30 வயது சிட்டி பைனும் மீது துன்புறுத்தல் குற்றச்சாட்டு பதிவாகியுள்ளது.
இந்நிலையில், சிட்டியை அம்னோ தலைவர் அகமது ஸாஹிட் ஹமிடி பாதுகாப்பதாக இணையம் மூலம் வதந்திகள் பரவி வருகின்றன.
இதற்கு டாக்டர் அகமது ஸாஹிட் மறுப்பு தெரிவித்துள்ளார். சிட்டியுடன் தாம் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை அடிப்படையாகக் கொண்டு புரளிகள் பரவி வருவதாக அவர் கூறினார்.
துன்புறுத்தல் குற்றச்சாட்டை எதிர்நோக்கும் சிட்டியுடன் தம்மை தொடர்புபடுத்த மேற்கொள்ளப்படும் முயற்சிகள் கவலை அளிப்பதாக அவர் செய்தியாளர்களிடம் தெரி வித்தார்.

