கோலாலம்பூர்: ஐந்து ஆண்டு
களுக்கு முன்பு மலேசியாவில் நிகழ்ந்த கோர விபத்தில்
பதின்மவயதினர் எட்டு பேர் மாண்டனர்.
மாற்றியமைக்கப்பட்ட மிதி
வண்டிகளில் சென்றுகொண்டிருந்த அந்தச் சிறுவர்களை வாகனம் ஒன்று மோதித் தள்ளியது.
அந்த வாகனத்தை ஓட்டிய 27 வயது சேம் கி டிங்கிற்கு ஆறு ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. கடந்த ஐந்து ஆண்டுகளாக அவர் சிறையில் இருந்தார். தற்போது அப்பெண் 10,000 ரிங்கிட் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
தீர்ப்புக்கு எதிராக சேம் மேல்முறையீடு செய்ய இருப்பதாக நம்பப்படுகிறது.
விபத்துக்கு சேம் காரணமில்லை என்றும் மிதிவண்டிகளை மாற்றியமைத்து சாலை விதி
முறைகளுக்கு உட்பட்டு நடக்காமல் சட்டவிரோத மிதிவண்டிப் பந்தயத்தில் அந்தச் சிறுவர்கள் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டதாகவும் மலேசியாவில் பரவலாக நம்பப்படுகிறது.
அச்சிறுவர்களின் மிதிவண்டிகளில் பிரேக், விளக்குகள் இல்லை என்று தெரிவிக்கப்பட்டது. 2017ஆம் ஆண்டு பிப்ரவரி 18ஆம் தேதியன்று அதிக வெளிச்சம் இல்லாத சாலையில் விபத்து நிகழ்ந்தது. மாண்ட சிறுவர்கள் 13 வயதுக்கும் 16 வயதுக்கும் இடைப்பட்டவர்கள்.

