பெரும்பாலான கட்டுப்பாடுகளை நீக்கியது தென்கொரியா

பெரும்பாலான கட்டுப்பாடுகளை நீக்கியது தென்கொரியா

1 mins read
c2a20e4f-8d4a-43f1-90e0-f09c20969e52
-

சோல்: தென்­கொ­ரி­யா­வில் கொவிட்-19 கிரு­மித்­தொற்று தொடர்­பாக விதிக்­கப்­பட்­டி­ருந்த பெரும்­பா­லான கட்­டுப்­பா­டு­கள் நேற்று நீக்­கப்­பட்­டன.

கடந்த இரண்டு மாதங்­கள் இல்­லாத அள­வில் அன்­றா­டப் பாதிப்பு 50,000க்கும் குறை­வா­கப் பதி­வாகி வரு­வ­தால் தென்­கொ­ரிய அர­சாங்­கம் இந்த முடிவை எடுத்­துள்­ளது.

மீண்­டும் வழக்­க­நி­லைக்­குத் திரும்ப முயற்­சி­கள் எடுக்­கப்­ப­டு­கின்­றன. அடுத்த வாரத்­தி­லி­ருந்து திரை­ய­ரங்­கு­கள், விளை­யாட்­ட­ரங்­கங்­கள் போன்ற உள்­ள­ரங்­கு­களில் நொறுக்­குத்­தீனி சாப்­பிட அனு­மதி வழங்­கப்­படும். அதிக­பட்­சம் பத்து பேர் மட்­டுமே ஒன்­று­கூட முடி­யும் என்ற விதி­மு­றை­யும் கைவி­டப்­

ப­டு­கிறது.

உண­வ­கங்­களும் வர்த்­த­கங்­களும் நள்­ளி­ர­வுக்­குப் பிறகும் இயங்க முடி­யும் என்று அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. இருப்­பி­னும், முகக்­க­வ­சத்தை பொது­மக்­கள் தொடர்ந்து அணிய வேண்­டும் என்று தெரி­விக்­கப்­பட்­டது. வெளிப்­பு­றங்­களில் முகக்­க­வ­சம்­அணியும் கட்­டா­யத்தை நீக்­கு­வது தொடர்­பாக அடுத்த இரண்டு வாரங்­களில் தீர்­மா­னிக்­கப்­படும்.