இருளில் மூழ்கும் இலங்கை மீனவர்களின் வாழ்க்கை

இருளில் மூழ்கும் இலங்கை மீனவர்களின் வாழ்க்கை

1 of 2

19 Apr 2022 - 12:56 pm

1 mins read

கடன் தொல்லையால் மூழ்கியுள்ள இலங்கையில், அன்றாட வாழ்க்கைச் செலவினங்களைச் சமாளிக்க தத்தளிக்கின்றனர் அந்நாட்டு மீன்வர்கள்.

அதிகரித்துள்ள எரிபொருள் விலை காரணமாக பல மீன்பிடி படகுகள் கடலுக்குச் செல்ல இயலவில்லை. மீன் வலைகள், தூண்டில்கள், ஐஸ் போன்ற பொருள்களின் விலையும் உயர்ந்துவிட்டது.

அப்படியே கடலுக்குள் சிறுதூரம் சென்று மீன் பிடித்தாலும், சிக்கும் மீனிலிருந்து கிடைக்கும் பணம் அன்றாட வாழ்க்கைச் செலவினங்களைச் சமாளிக்க போதவில்லை. வேறு வழியின்றி பலர் தாங்கள் சாப்பிடும் உணவு அளவைக் குறைத்துகொண்டுள்ளனர். வேறு சிலர் தங்கள் கடன்களைத் திருப்பிதருவதை முற்றாக நிறுத்திவிட்டனர். வாழ்க்கை மிக மோசமாக இருப்பதாக மீனவர்கள் கதறுகின்றனர்.

இலங்கை பொருளியலில் மீன்பிடி தொழில் ஒரு சிறிய பங்குதான். ஆனால் நாட்டின் பத்து விழுக்காட்டு மக்களுக்கு அது வாழ்வாதாரமாக உள்ளது.

அமெரிக்கா, பிரிட்டன், சீனா, ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு இறால், நண்டு, சூரைமீன், வாள்மீன் போன்ற கடல் உயிரினங்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

இலங்கை 1948ல் சுதந்­தி­ரம் அடைந்த பிறகு இது­வரை இல்லாத அள­வுக்குப் படு­மோ­ச­மான பொரு­ளி­யல் நெருக்­க­டி­யில் சிக்கிவிட்டது.