பொம்மை துப்பாக்கி காட்டி வங்கியைக் கொள்ளையடித்த முதியவர்

பொம்மை துப்பாக்கி காட்டி வங்கியைக் கொள்ளையடித்த முதியவர்

1 mins read
5b82dc61-877e-4a18-a50a-91514b52c753
படங்கள்: ஹாங்காங் காவல் துறை/பேஸ்புக் -
multi-img1 of 2

ஹாங்காங்கில் ஒரு வங்கிக்குள் நுழைந்து ஒரு பொம்மைத் துப்பாக்கி நீட்டி சுமார் $2,400 வெள்ளி கொள்ளையடுத்துள்ளார் ஒரு சிங்கப்பபூரர். சம்பவம் நடந்த ஏழு மணி நேரத்துக்குப் பிறகு அந்த 73 வயது நபர் காவல் அதிகாரிகளிடம் சிக்கினார்.

கொள்ளை, குறித்த காலத்துக்கு மீறித் தங்கியது ஆகிய குற்றங்களை அந்த ஆடவர் எதிர்நோக்குகிறார்.

ஹாங்காங்கின் ஒரு மத்திய பகுதியில் உள்ள ஒரு வங்கிக்குள் நுழைந்த அந்த நபர் முதலில் ஒரு சீட்டை ஒரு வங்கி அதிகாரியிடம் நீட்டியுள்ளார். பிறகு துப்பாக்கியைக் காட்டி பணம் தரும்படி மிரட்டியுள்ளார். பணத்தை வைக்க ஒரு கருப்புப் பையை அவர் கொடுத்துள்ளார்.

கொள்ளை சம்பவத்தில் யாருக்கும் காயமில்லை எனக் கூறப்பட்டது.

காவல் அதிகாரிகள் அவரைக் கைது செய்தபோதுதான் பயன்படுத்தப்பட்ட ஆயுதம் பொம்மை துப்பாக்கி என்று தெரியவந்தது. கொள்ளையடிக்கப்பட்ட பணம் மீட்கப்பட்டது.

கொள்ளைக்காரன் ஹாங்காங்கில் 10 ஆண்டுகளுக்கு மேலாக மீறித் தங்கியிருந்ததாகத் தெரியவந்தது. அதோடு, 2020ஆம் ஆண்டு ஒரு மருந்தகத்தை அவர் கொள்ளையடித்தாகச் சந்தேகிக்கப்படுகிறது.

கொள்ளை நிரூபிக்கப்பட்டால், அந்த சிங்கப்பூரருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம்.