அதிபரின் அதிகாரங்கள் குறைக்கப்படும்: மகிந்த

அதிபரின் அதிகாரங்கள் குறைக்கப்படும்: மகிந்த

2 mins read
289563b5-1574-47cc-bb28-f447d818d044
இலங்கையின் நிலவும் பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து அதிபர் கோத்தபாய ராஜபக்சே பதவி விலகக் கோரி சாலையில் வாகனங்களை நிறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள். படம்: இணையம் -

கொழும்பு: இலங்­கை­யில் அதி­ப­ருக்கு வழங்­கப்­படும் அதி­கா­ரங்­கள் குறைக்­கப்­படும் என அந்­நாட்­டின் பிர­த­மர் மகிந்த ராஜ­பக்சே நேற்று தெரி­வித்­தார்.

இலங்­கை­யில் விலை­வாசி உயர்வு கார­ண­மாக அதி­பர் கோத்­த­பாய ராஜ­பட்ச பதவி வில­கக் கோரி இலங்­கை­யின் பல்­வேறு பகு­தி­களில் மக்­கள் ஆர்ப்­பாட்­டங்­களில் ஈடு­பட்டு வரும் நிலை­யில், இந்த அறி­விப்பு வெளி­யாகி உள்­ளது.

இது­கு­றித்து இலங்கை நாடாளு­மன்­றத்­தில் பேசிய மகிந்த, "நாட்டை அர­சி­யல் ரீதி­யாக நிலைப்­ப­டுத்­து­வ­தற்­கான துரித நட­வ­டிக்­கை­களில் ஒன்­றாக அதி­காரக் குறைப்பு இருக்­கும்.

"பொரு­ளா­தா­ரத்தை மீட்­ப­தற்­காக அனைத்­து­லக பண நிதி­யத்­தி­டம் பேச்­சு­வார்த்தை நடத்த இது உத­வும்.

"பொரு­ளா­தார பிரச்­சினை­களுக்குத் தீர்வு காண, நாட்­டின் சமூக, அர­சி­யல் நிலைத்­தன்மை முக்­கி­ய­மா­னது.

"நாடா­ளு­மன்­றத்­துக்­குக் கூடு­தல் அதி­கா­ரம் அளிக்­கும் அர­சி­ய­ல­மைப்பு நிலையே சீர்­தி­ருத்­தத்­தின் தொடக்­க­மா­கும்," என்­றார் அவர்.

இலங்­கை­யின் பொரு­ளா­தார சீர்­கு­லை­விற்கு அதி­பர்­தான் கார­ணம் என தொடர்ந்து 11வது நாளாக நேற்­றும் அதி­பர் அலு­வ­ல­கத்­தில் ஆயி­ரக்­க­ணக்­கா­ன­வர்­கள் ஆர்ப்­பாட்­டத்­தில் ஈடு­பட்­ட­னர்.

திங்­கள்­கி­ழமை புதி­தா­கப் பதவி­ யேற்­றுக்­கொண்ட 17 அமைச்­சர்­க­ளி­டம் பேசிய அதி­பர் கோத்­த­பாய ராஜ­பக்சே பொரு­ளா­தார நெருக்­கடிக்­குத் தாமும் ஒரு கார­ணம் என்­பதைப் பகி­ரங்­க­மாக ஒப்­புக்­கொண்­டார்.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

இதற்­கி­டையே, பொரு­ளா­தார நெருக்­கடி குறித்து நிதி அமைச்­சர் அலி சாப்ரி, வா‌ஷிங்­ட­னில் அனைத்­து­ல­கப் பண நிதி­யத்துடன் பேச்சு­வார்த்தை நடத்­தி­னார்.

அப்­போது, இலங்­கைக்­கு விரை­வாக நிதி­யு­தவி வழங்­கு­வது குறித்து, பரி­சீ­லனை செய்­வ­தாக பண நிதி­யம் சொன்­ன­தாக அவர் கூறி­னார்.

இந்­தி­யா­வுக்­குப் பாராட்டு

வா‌ஷிங்­ட­னில் நிதி­யத்­தின் மாநாட்­டில் இந்­தி­யா­வின் நிர்­மலா சீதா­ரா­மன் உள்­ளிட்ட ஜி-20 நாடு­களின் நிதியமைச்­சர்­கள் பங்­கேற்­ற­னர். அப்­போது பண நிதி­யத்­தின் நிர்­வாக இயக்­கு­நர் கிறிஸ்­ட­லினா ஜார்­ஜிவா, சரி­யான நேரத்­தில் இலங்­கைக்கு இந்­தியா செய்து வரும் மனி­தாபிமான உத­விக்­குப் பாராட்டு தெரிவித்­தார்.

இலங்கையில் டீசல் கையிருப்பு தீர்ந்துவிட்ட இக்கட்டான சூழ்நிலை யில், அந்நாட்டிற்கு இந்தியா 40,000 டன் டீசல் அனுப்பியும் கடனுதவி செய்தும் உதவியது.