பொதுப் போக்குவரத்தில் முகக்கவச உத்தரவு ரத்து

பொதுப் போக்குவரத்தில் முகக்கவச உத்தரவு ரத்து

1 mins read
0073a26b-37d7-485d-9197-9f1e4b0634a7
-

ஃபுளோரிடா: அமெரிக்காவில் பொதுப் போக்குவரத்தில் பயணம் செய்யும்போது முகக்கவசம் அணிய வேண்டும் என்ற பைடன் அரசாங்கத்தின் உத்தரவை ஃபுளோரிடா மாவட்ட நீதிமன்றம் ரத்து செய்தது.

இதையடுத்து, அமெரிக்கன் ஏர்லைன்ஸ், யுனைடெட் ஏர்லைன்ஸ் போன்ற முக்கிய விமான நிறுவனங்கள், ரயில் போக்குவரத்து அமைப்பு உள்ளிட்டவை முகக்கவசம் அணியும் கட்டுப்பாட்டை உடனடியாக தளர்த்திவிட்டன.

பெருகி வரும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த டாக்சி, பேருந்து, விமானம் போன்ற பொது போக்குவரத்து பயணங்களின்போது மக்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என்ற உத்தரவை மே 3ஆம் தேதி வரை அமெரிக்க நோய் தடுப்பு, கட்டுப்பாடு ஆணையம் நீட்டித்தது.

இதுகுறித்து விசாரணை நடத்திய ஃபுளோரிடா மாவட்ட நீதிமன்றம், கட்டாய முகக்கவச உத்தரவை ரத்து செய்தது. மேலும் மக்கள் முகக்கவசம் அணிய உத்தரவிட அமெரிக்க நோய் தடுப்பு, கட்டுப்பாடு ஆணையத்திற்கு எந்தச் சட்ட அதிகாரமும் கிடையாது எனவும் சொன்னது.

தொழில்துறை குழுக்கள், குடியரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்டாய முகக்கவச உத்தரவை நிரந்தரமாக முடிவுக்கு கொண்டுவர விரும்பினர்.