கிழக்கு உக்ரேனில் ர‌ஷ்யா தீவிர தாக்குதல்

கிழக்கு உக்ரேனில் ர‌ஷ்யா தீவிர தாக்குதல்

1 mins read
fd663884-6fba-4753-aa9e-47006850e093
-

டோன்­பாஸ்: உக்­ரே­னின் கியவ் நக­ரில் இருந்து படை­க­ளைத் திரும்ப பெற்ற ர‌ஷ்யா, அந்­நாட்­டின் கிழக்­குப் பகு­தி­யில் தனது தாக்­கு­த­லைத் தீவி­ரப்­ப­டுத்­தி­யுள்­ளது.

அதி­லும், ர‌ஷ்யா கைப்­பற்­றி­விட்­ட­தாக கூறப்­படும் மரி­ய­போல் நக­ரின் தெற்­கில் இருந்து நீளக்­கூ­டிய லுஹான்ஸ்க், டொனெட்ஸ்க் ஆகிய முக்­கிய கிழக்­குப் பகு­தி­க­ளைக் கைப்­பற்ற ர‌‌ஷ்யா குறி­வைத்­துள்­ளது.

இப்­ப­கு­தி­களில் உக்­ரே­னின் பாது­காப்பை உடைக்க ர‌ஷ்யா முயன்­ற­து. ஆனால், உக்­ரே­னிய வீரர்­கள் விடா­மல் போரி­டு­வ­தா­க­உக்­ரே­னின் பாது­காப்பு மன்ற செய­லா­ளர் ஒலெக்ஸி டானி­லோவ் சொன்­னார்.

ஒரே இர­வில் கிட்­டத்­தட்ட 1,000 இலக்­கு­க­ளைத் தாக்கி அழித்­து­விட்­ட­தாக ர‌ஷ்யா கூறு­கிறது.

இதன் காரணமாக டொனெட்ஸ்க் பகு­தி­யில் நான்கு பேர் மாண்­டு­விட்­ட­னர். லிவிவ் பகுதி­யில் நடத்­தப்­பட்ட ஏவு­க­ணைத் தாக்­கு­த­லில் ஏழு பேர் கொல்­லப்­பட்­ட­னர்.

டோன்­பாஸ் பகு­தி­யில் போர் தொடங்­கி­விட்­ட­தா­க­வும் அப்­ப­கு­தி­யில் பெரு­ம­ள­வில் ர‌ஷ்ய ராணு­வப் படை குவிக்­கப்­பட்­டுள்­ள­தா­க­வும் உக்­ரே­னிய அதி­பர் ஸெலன்ஸ்கி கூறி­யுள்­ளார்.

"இரண்­டா­வது கட்ட போர் தொடங்­கி­விட்­டது. எத்­தனை ர‌ஷ்­யப் படை­கள் வந்­தா­லும் எங்­க­ளுக்­குக் கவ­லை­யில்லை. நாங்­கள் அவர்­களை எதிர்த்துப் போரி­டு­வோம்," என்­றார் அவர்.

உக்­ரே­னால் ர‌ஷ்­யாவை வீழ்த்த முடி­யும் என்ற உக்­ரேன் அதி­பர் அலு­வ­ல­கத்­தின் துணைத் தலை­வர் இகோர் ஜோவ்­கவா, அதற்கு பீரங்கி அமைப்­பு­கள், டாங்­கி­கள், கவச வாக­னங்­கள் போன்ற கன­ரக ஆயு­தங்­கள் உக்­ரே­னி­டம் இருப்­பது மிக­வும் முக்­கி­யம் என்று சொன்னார்.