காபூல் பள்ளிக்கூட குண்டு வெடிப்புகளில் ஆறு பேர் மரணம்

காபூல் பள்ளிக்கூட குண்டு வெடிப்புகளில் ஆறு பேர் மரணம்

1 mins read
fe90be1c-5d83-4c1c-bf31-15b03bb20958
-
Google News Preferred Icon

மேற்கு காபூலில் உள்ள அப்துல் ரஹீம் சாஹித் உயர்நிலைப் பள்ளி வளாகத்தின் அருகே நேற்று காலை நடந்த அடுத்தடுத்த 3 குண்டு வெடிப்புகளில், குறைந்தது ஆறு பேர் கொல்லப்பட்டனர். மேலும் 11 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இதில் பலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

இத்தாக்குதலுக்கு இதுவரை எந்த இயக்கமும் பொறுப்பேற்கவில்லை. மாணவர்கள் காலை வகுப்புகளுக்குப் பிறகு வெளியே வந்தபோது குண்டு வெடிப்பு நிகழ்ந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர். தாக்குதலில் காயமடைந்தவரை அதிகாரிகள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

படம்: ஏஏஃப்பி