இலங்கை ஆர்ப்பாட்டங்களில் ஒருவர் பலி

இலங்கை ஆர்ப்பாட்டங்களில் ஒருவர் பலி

fallback-0
படம்: ஏஃபி

20 Apr 2022 - 6:22 pm

1 mins read

இலங்கையில் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் காவல் துறை அதிகாரிகளுக்கும் இடையே நடந்த கலவரத்தில் ஒருவர் உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து அதிபர் கோத்தபயா ராஜபக்சே பதவி விலக கோரி ஆர்ப்பாட்டங்கள் வலுபெற்றுள்ளன. நடக்கும் ஒவ்வொரு மரணத்துக்கும் அதிபரே பொறுப்பு என எதிர்க்கட்சிகள் குமுறுகின்றன.

நேற்றிரவு ஒரு ரயில் தண்டவாளத்தை முற்றுகையிட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் அதிகாரிகள் மீது கல் வீசினர். அவர்களைக் கலைக்க முதலில் கண்ணீர் வெடி பயன்படுத்தப்பட்டது. ஆர்ப்பாட்டக்காரர்கள் கலைந்து செல்லாததால், துப்பாக்கிச் சுடு நடத்தப்பட்டது. இதில் ஒருவர் மாண்டார். பலர் காயமடைந்தனர்.

இந்நிலையில் அனைத்துலக பண நிதிய அதிகாரிகளைச் சந்திக்க நிதியமைச்சர் அலி சாப்ரி தலைமையில் ஒரு குழு அமெரிக்காவுக்குச் சென்றுள்ளது.