ரயில் நிலையத் தளமேடையில் காத்திருந்த பெண் பயணி ஒருவர், ஓடும் ரயிலுக்கு அடியில் மயங்கி விழுந்த சம்பவம் அர்ஜெண்டினாவில் மார்ச் 29ஆம் தேதி நிகழ்ந்தது.
தலைநகர் பியூனோஸ் அய்ரெசில் உள்ள ஒரு ரயில் நிலையத்துக்கு வந்து நின்ற அந்த ரயிலுக்கு அடியில் இருந்து அந்த மாதை மற்ற பயணிகள் காப்பாற்றினர். ரயில் தளமேடைக்கு அவரை இழுத்து உட்கார வைத்த பயணிகள், மருத்துவ ஊர்தியில் அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ரயில் நிலையத்தில் உள்ள சிசிடிவி கண்காணிப்புக் கருவியில் அந்தச் சம்பவத்தைக் காட்டும் காட்சிகள் பதிவாகின.
"நான் எப்படி உயிர் பிழைத்தேன் என்பது எனக்கே தெரியவில்லை. நான் மறுபிறவி எடுத்து வந்துள்ளதுபோன்று உணர்கிறேன்," என்று அர்ஜெண்டின தொலைக்காட்சி ஒளிவழி ஒன்றிடம் அந்த மாது கூறினார்.


