காற்பந்துத் துளிகள்

காற்பந்துத் துளிகள்

1 mins read
da19409a-181f-48c6-8f8e-882b68094a22
-

கொடிகட்டிப் பறக்கும் லிவர்பூல்

லிவர்பூல்: இங்கிலிஷ் பிரிமியர் லீக்கில் மான்செஸ்டர் யுனைட்டெட் காற்பந்து அணியை 4-0 எனும் கோல் கணக்கில் வீழ்த்தியுள்ளது லிவர்பூல் அணி (படம்).

கடந்த சில வாரங்களாகப் பல தரப்பினரின் கைத்தட்டலைப் பெறும் வகையில் விளையாடிவரும் லிவர்பூல், இந்த வெற்றியின் மூலம் ஏற்கெனவே தவித்துக்கொண்டிருந்த யுனைடெட்டை பரிதாப நிலைக்குத் தள்ளியது. பரம வைரிகளான இவ்விரு அணிகளுக்கும் இடையே உள்ள பெரிய வேறுபாடு நேற்று அதிகாலை நடைபெற்ற ஆட்டத்தில் தெளிவாகத் தெரிந்தது.

லீக் கிண்ணத்தை வெல்வதற்கான போட்டியில் சில மாதங்களுக்கு முன் பின்தங்கியிருந்த லிவர்பூல் இப்போது கிண்ணத்தை வெல்லக்கூடிய நிலையில் உள்ளது.

மீண்டும் பிரிமியர் லீக்கில் ஃபுல்ஹம்

லண்டன்: இங்கிலாந்து காற்பந்தில் பிரிமியர் லீக்கிற்கு அடுத்த நிலையில் உள்ள சேம்பியன்ஷிப் எனும் லீக்கில் போட்டியிடும் ஃபுல்ஹம் அணி, அடுத்த பருவத்தில் மீண்டும் பிரிமியர் லீக்கிற்கு முன்னேறப்போவது உறுதியாகியுள்ளது. நேற்று அதிகாலை நடைபெற்ற ஆட்டத்தில் ஃபுல்ஹம், பிரெஸ்ட்டன் நோர்த் எண்ட் அணியை 3-0 எனும் கோல் கணக்கில் வென்றது.

சேம்பியன்ஷிப் பட்டியலில் முதல் இரு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அடுத்த பருவத்தில் பிரிமியர் லீக்கிற்கு முன்னேறும். இந்த வெற்றியின் மூலம் பட்டியலின் முதல் இரு இடங்களில் ஒன்றைப் பிடிப்பதை ஃபுல்ஹம் உறுதிப்படுத்திக்கொண்டது.