கொவிட்-19 விதிமுறைகளை மீறும் மலேசிய வர்த்தகங்கள்

கொவிட்-19 விதிமுறைகளை மீறும் மலேசிய வர்த்தகங்கள்

1 mins read
3e6a615e-e2f7-4481-83e3-5d16f5230caf
-

கோலா­லம்­பூர்: மலே­சியாவில் சில வர்த்­த­கங்­கள் கொள்­ளை­நோய்ப் பர­வல் காலத்­தில் இழந்த வரு­வாயை மீட்­டெ­டுக்க கிரு­மிப் பரவல் விதி­மு­றை­களை மீறு­வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சில வர்த்­த­கங்­கள் முழு­மை­யா­கத் தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளா­தோ­ருக்­கும் தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டோ­ருக்கு மட்­டும் வழங்­கப்­ப­ட­வேண்­டிய சேவை­களை அளிக்­கின்­றன.

உண­வ­கங்­கள் உள்­ளிட்ட சில வர்த்­த­கங்­கள் இவ்­வாறு நடந்­து­கொள்­கின்­றன. சில நிறு­வ­னங்­கள் மனி­த­வ­ளப் பற்­றாக்­குறையைச் சமா­ளிக்க தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளா­தோ­ரை­யும் வேலைக்கு எடுப்­ப­தா­கத் தெரி­விக்­கப்­பட்டுள்ளது.

மலே­சி­யா­வில் வாரந்­தோ­றும் 10,000க்கும் குறை­வான கிரு­மித்­தொற்றுச் சம்­ப­வங்­கள் பதி­வாகி வரு­கின்­றன.