மெல்பர்ன்: ஆஸ்திரேலியாவில் முதன்முறையாகப் பயணிகளுடன் பறந்த வெப்பக் காற்று பலூன் ஒன்று மெல்பர்ன் நகரில் அவரசமாகத் தரையிரங்க நேரிட்டது. இந்த பலூனில் 12 பேர் பயணம் செய்தனர்.
மெல்பர்ன் நகரின் எல்வுட் வட்டாரத்தில் இந்த பலூன் நேற்று வீடுகளின் மேல் விழுந்தது. இச்சம்பவம் குறித்து அந்நகர நேரப்படி நேற்று காலை சுமார் 7.20 மணிக்கு அவசர சேவை அதிகாரிகளுக்கு அழைப்பு வந்தது.
காற்றிழந்த பலூனை அகற்ற அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டனர். இச்சம்பவத்தில் யாரும் காயமடையவில்லை.
ஆஸ்திரேலியாவின் போக்குவரத்துப் பாதுகாப்புப் பிரிவு இது குறித்து விசாரணை நடத்தி வருகிறது. பலூனின் மாலுமி, பயணிகள் ஆகியோரை அப்பிரிவு விசாரிக்கிறது.