மணிலா: பிலிப்பீன்சின் முன்னாள் அதிபர் ஃபெர்டினேண்ட் மார்க்கோஸின் மகன் அதிபர் தேர்தலில் போட்டியிடுவதைத் தடுக்கும் நோக்குடன் தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
அடுத்த மாதம் ஒன்பதாம் தேதியன்று பிலிப்பீன்ஸ் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது.
அதில் திரு ஃபெர்டினேண்ட் மார்க்கோஸ் ஜூனியர் போட்டியிடுவதைத் தடுக்க சில வழக்குகள் தொடரப்பட்டன. அவற்றில் எஞ்சியிருந்த வருமான வரி தொடர்பிலான வழக்கும் நேற்று தள்ளுபடி செய்யப்பட்டது.
வருமான வரிக்கான விண்ணப்பத்தை அவர் சரிவரச் செய்யவில்லை என்ற வாதம் ஏற்றுக்கொள்ளக்கூடியது அல்ல என்று தேர்தல் ஆணையம் தீர்ப்பளித்தது.

