மேம்பட்டுள்ள ஷங்ஹாய் கொவிட்-19 நிலவரம்

மேம்பட்டுள்ள ஷங்ஹாய் கொவிட்-19 நிலவரம்

1 mins read
a6779129-8e8d-48b0-bc4e-f56282de4906
-

ஷங்­ஹாய்: சீனா­வின் ஷங்­ஹாய் நக­ரின் இரண்டு வட்­டா­ரங்­களில் புதிய கொவிட்-19 கிரு­மித்­தொற்று சம்­ப­வங்­கள் பதி­வா­க­வில்லை. அதைத் தொடர்ந்து கிரு­மிப் பர­வல் அலைக்கு எதி­ரான அந்­ந­க­ரின் போராட்­டம் வெற்­றி­ய­டை­யும் அறி­கு­றி­கள் தென்­ப­டு­வ­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

ஷங்­ஹா­யின் சுற்று வட்­டா­ரங்­களில் இருக்­கும் சில ஆலை­கள் படிப்­ப­டி­யாக மீண்­டும் இயங்­கத் தொடங்­கு­கின்­றன.

அந்நகரில் உள்ள பிரபல மின்சார வாகன நிறுவனமான 'டெஸ்லா'வின் ஆலையும் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. முன்னதாக அது மூன்று வாரங்களுக்கு மூடப்பட்டிருந்தது.

சென்ற மாதம் நடை­மு­றைப்­படுத்­தப்­பட்ட கடு­மா­யான முடக்­க­நி­லை­யால் ஷங்­ஹா­யில் வாழும் 25 மில்­லி­யன் மக்­கள் பெரும் இன்­ன­லுக்கு ஆளா­யி­னர்.