மன்னிப்புக் கேட்ட ஜான்சன்

மன்னிப்புக் கேட்ட ஜான்சன்

1 mins read
6d7dd072-d6c4-406b-b39e-38df5d4a3baf
-

லண்­டன்: முடக்­க­நிலை நடப்­பில் இருந்­த­போது விதி­மு­றை­களை மீறி பிறந்­த­நாள் கொண்­டாட்­டத்­தில் கலந்­து­கொண்­ட­தற்கு பிரிட்­டிஷ் பிர­த­மர் போரிஸ் ஜான்­சன் மன்­னிப்புக் கேட்­டுக்­கொண்­டுள்­ளார். தங்­க­ளின் பிர­த­மர் கூடு­தல் பொறுப்­புடன் நடந்­து­கொள்­ள­வேண்­டும் என்று எதிர்­பார்ப்­ப­தற்கு மக்­களுக்கு எல்லா உரி­மை­யும் உள்­ளது என்று அவர் கூறி­னார்.

அச்­சம்­ப­வம் 2020ஆம் ஆண்டு நடை­பெற்­றது. பல­முறை மன்­னிப்பு கேட்­டுள்ள திரு ஜான்­ச­னுக்­குப் பெரும்­பா­லான ஆளும் கட்சி நாடாளு­மன்ற உறுப்­பி­னர்­கள் ஆத­ரவைத் தெரி­வித்து வந்­துள்­ள­னர். தமது செயல் விதி­மு­றையை மீறும் வண்­ணம் அமைந்­ததை அவர் அந்த வேளை­யில் அறி­ய­வில்லை என்­பது அவர்­க­ளின் வாதம்.

எனி­னும், பிரிட்­ட­னின் எதிர்­கட்­சி­யான தொழிற்­கட்­சி­யின் தலை­வர் கெயர் ஸ்டார்­மர், திரு ஜான்­சனின் மன்­னிப்பை வேடிக்­கை­யான ஒன்று என்று கூறிக் கண்­ட­னம் தெரி­வித்­துள்­ளார்.

திரு ஜான்­சன் நாடா­ளு­மன்றத்தை ஏமாற்­றி­னாரா என்­பதை விசா­ரிப்பதற்கு நாடா­ளு­மன்ற குழுவை அமைப்­பது குறித்து முடி­வெ­டுக்க இன்று வாக்­கெ­டுப்பு நடை­பெ­ற­வுள்­ளது. அர­சாங்க விதி­மு­றை­க­ளின்­படி தெரிந்தே நாடாளு­மன்­றத்தை ஏமாற்­றுபவர்கள் பதவி­வி­ல­க­ வேண்­டி­யி­ருக்­க­லாம்.

விசா­ரணை நடத்­த­வேண்­டும் என்­பது வாக்­கெ­டுப்­பில் முடி­வானால் ஏழு நாடா­ளு­மன்ற உறுப்­பினர்­க­ளைக் கொண்ட நாடா­ளு­மன்ற சலு­கை­கள் குழு, திரு ஜான்­ச­னுக்கு எதி­ராகத் தண்­ட­னை­களை விதிக்­கு­மாறு பரிந்­து­ரைக்­க­லாம்.

தற்­கா­லி­க­மா­கப் பத­வி­வி­ல­கு­வது, நாடா­ளு­மன்­றத்­தி­லி­ருந்து நீக்­கப்­ப­டு­வது போன்­றவை பரிந்­து­ரை­களில் இடம்பெறலாம்.