ஆஸ்திரேலியாவின் மெல்பர்னில் உள்ள ஒரு உணவகத்தில் ரொட்டி பிராட்டா போடும் சமையல்காரர் தேவை. தேர்ந்தெடுக்கபடுபவருக்கு மாதச் சம்பளம் $5,500. அதோடு தங்குமிடமும், உணவகத்திலே சாப்பாடும் வழங்கப்படும்.
ரொட்டிபார் எனும் மலேசிய உணவகம் விதவிதமான மலேசிய உணவு வகைகளைப் பரிமாறுகிறது. மெல்பர்ன் நகரிலே ஆகச் சிறந்த பிராட்டா இங்கு தான் கிடைக்கும் என்று உணவகம் கூறுகிறது.
உணவகம் விரிவுப்படுத்தப்படுவதால், ரொட்டி பிராட்டா போடும் சமையல்காரர் தேவைப்படுகிறார். விண்ணப்பம் செய்பவர்களுக்கு இந்தத் தகுதிகள் தேவை:
- ரொட்டி பிராட்டா போட்ட அனுபவம் இருப்பது கட்டாயம்
- பிராட்டவை சுழற்ற தெரியவேண்டும்.
- சுறுசுறுப்பான வேலை சூழல்
- ஆஸ்திரேலியாவில் வேலை செய்யும் அனுமதி இருக்கவேண்டும்
வேலைக்குத் தேர்ந்தெடுபடுவருக்கு மாதந்தோறும் கிட்டத்தட்ட $5,075லிருந்து $5,495 வெள்ளி சம்பளம் கிடைக்கும்.
கடந்த 24 நாள்களாக இந்த வேலை விளம்பரம் இணையத்தளத்தில் உள்ளது. சரியான ரொட்டி பிராட்டா சமையல்காரரை உணவகம் இன்னும் தேடுகிறது.

