பிரிட்­டிஷ் அரசியாரின் 70 ஆண்டு ஆட்சியைக் குறிக்க உருவப் பொம்மை

பிரிட்­டிஷ் அரசியாரின் 70 ஆண்டு ஆட்சியைக் குறிக்க உருவப் பொம்மை

1 mins read
2d43ec05-0b2b-485e-b191-fca3515c5063
படம்: MATTEL.COM -

பிரிட்டனின் எலிசபெத் அரசியார் அரியணை ஏறி 70 ஆண்டுகள் நிறைவு அடைந்துள்ளன. இந்த மைல்கல்லைக் குறிக்க அவர் உருவத்தைப் போன்ற பார்பி பொம்மை உருவாக்கப்பட்டுள்ளது.

வெள்ளை நிற ஆடை, தோளுக்குக் குறுக்கே நீல நிற துணி, பதக்கங்கள் ஆகியவற்றால் பொம்மை அலங்கரிக்கப்பட்டுள்ளது. பொம்மையின் தலையில் உள்ள கிரீடம் அரசியார் தமது திருமண நாளான்று அணிந்திருந்த கிரீடம் போன்றே உருவாக்கப்பட்டுள்ளது.

லண்டனின் முக்கிய கடைத்தொகுதிகளில் பொம்மை விற்கப்படும்.

பிரிட்­டிஷ் அரசியார் இரண்டாம் எலி­ச­பெத் ஏப்ரல் 22ஆம் தேதி தமது 96வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.

தமது தந்தை ஆறாவது ஜார்ஜ் அரசர் 1952ஆம் ஆண்டு பிப்ரவரி 6ஆம் தேதி உயிர் இழந்ததை அடுத்து, எலிசபெத் பிரிட்டிஷ் அரசியாகப் பதவி ஏற்றார்.

இங்கிலாந்து அரியணையில் ஒருவர் 70 ஆண்டுகள் நீடித்திருப்பது இதுவே முதன்முறையாகும்.