இலங்கை ஆர்ப்பாட்டத்தில் பலியானவர் பெட்ரோல் வாங்க வரிசையில் நின்றுகொண்டிருந்தார்

இலங்கை ஆர்ப்பாட்டத்தில் பலியானவர் பெட்ரோல் வாங்க வரிசையில் நின்றுகொண்டிருந்தார்

21 Apr 2022 - 7:48 pm

1 mins read

இலங்கையில் ஆர்ப்­பாட்­டத்­தின்­போது கொல்லப்பட்டவர் பெட்ரோலுக்காக வரிசையில் நின்றுகொண்டிருந்தவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவல் துறை அதிகாரிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 41 வயதான ச்சமிண்டா லக்‌ஷன் என்பவர் கொல்லப்பட்டார் என அவர் அனுமதிக்கப்பட்ட மருத்துவமனை தெரிவித்து. அவருக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.

ரம்­புக்­கனா என்ற மத்­திய நக­ரில் வன்செயல் மூண்டது. ஒரு­வர் கொல்­லப்­பட்­டதோடு, 13 பேர் காய­ம­டைந்­த­னர்.

ஆர்ப்பாட்டம் வன்செயலின்றி நடந்துகொண்டிருந்ததாகவும், ஆர்ப்பாட்டக்காரர்களைக் கலைக்க கண்ணீர் வெடி பயன்படுத்தப்பட்டபோதுதான் கலவரம் வெடித்ததாக உள்ளூர்வாசிகள் கூறினர்.

சம்பவம் குறித்து நடுநிலையான விசாரணை மேற்கொள்ளப்படும் என அதிபர் கோத்தபாய ராஜபக்சேவும், பிரதமர் மஹிந்த ராஜபக்சேவும் கூறியுள்ளனர்.

மாண்ட ச்சமிண்டா லக்‌ஷனுக்கு இறுதி அஞ்சலி செலுத்த பலர் அவர் வீட்டில் கூடியிருந்தனர்.

"என் தந்தை மிகவும் நல்லவர். மற்றவர்களுக்கு உதவி செய்ய அவர் என்றும் மறுத்ததில்லை. அவர் யாருக்கும் தொந்தரவு கொடுத்ததில்லை," என அவரின் ஒன்பது வயது மகள் கண்ணிர் ததும்ப நினைவுகூர்ந்தார்.