இயல்புநிலைக்குத் திரும்பும் சுற்றுலாத் துறை

இயல்புநிலைக்குத் திரும்பும் சுற்றுலாத் துறை

2 mins read
6099e91e-cea0-4337-807d-fd93f177d89b
பிரபல சுற்றுலா தலமான இத்தாலியின் வெனிஸ் நகரம். நீண்ட இடைவெளிக்குப் பிறகு சுற்றுலாத் துறை பெரிய அளவில் மீண்டுவரத் தொடங்கிவிட்டது.படம்: ஏஎஃப்பி -

மணிலா: அனைத்­து­லக பயண, சுற்­றுலா துறை­கள் அடுத்த ஆண்­டுக்­குள் கொவிட்-19 கொள்­ளை­நோய்ப் பர­வ­லுக்கு முந்­தைய காலத்­தில் இருந்த நிலைக்­குத் திரும்­பும் என்று கணிக்­கப்­பட்­டுள்­ளது. மேலும், இத்­து­றை­கள் அனைத்­து­லக மொத்த உள்­நாட்டு உற்­பத்­தி­யை­விட வேக­மாக வளர்ச்சி காணும் என்று 'டபிள்­யூ­டி­டிசி' எனும் உலக பயண, சுற்­றுப்­ப­யண மன்­றம் தெரி­வித்­துள்­ளது.

இந்த ஆண்டுக்கும் 2032ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் பயண, சுற்றுப்பயணத் துறைகள் ஆண்டுதோறும் 5.8 விழுக்காடு வளர்ச்சியடையும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

ஒப்புநோக்க அனைத்துலக மொத்த உள்நாட்டு உற்பத்தி 2.7 விழுக்காடு வளர்ச்சி காணும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிலிப்­பீன்ஸ் தலை­ந­கர் மணி­லா­வில் உலக பயண, சுற்­றுலா மன்­றம் மாநாடு ஒன்றை நடத்­தி­யது. அதில் இந்த விவ­ரங்­க­ளைக் கொண்ட அறிக்கை வெளி­யி­டப்­பட்­டது.

2019ஆம் ஆண்டு அனைத்துலக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பயண, சுற்றுலாத் துறைகள் 10ல் ஒரு பங்கை வகித்தன. 13.07 டிரில்லியன் வெள்ளி மதிப்புள்ள இத்துறைகள் கொள்ளைநோய்ப் பரவலால் முடங்கிப்போயின.

இவற்றின் மதிப்பு பாதியானதுடன் 62 மில்லியன் பேர் தங்களின் வேலையை இழந்தனர்.

"பய­ணத்துறை கவ­னத்தை ஈர்க்­கும் வண்­ணம் அபா­ர­மாக மீண்டு வர­வுள்­ளது. இது, சீனா மீண்­டும் பொரு­ளி­ய­லைத் திறப்­பதைப் பொருத்­தும் இருக்­கிறது," என்று உலக பயண, சுற்றுலா மன்­றத்­தின் தலை­வர் ஜூலியா சிம்ப்­சன் கூறி­னார்.

இன்­ன­மும் கொவிட்-19 கிரு­மிப் பர­வலை முற்­றி­லும் அழிக்க எண்­ணம் கொண்­டுள்ள ஓரிரு நாடு­களில் சீனா­வும் ஒன்று. சீனா அடிக்­கடி முடக்­க­நி­லையை நடை­மு­றைப்­படுத்­து­வ­தால் உலக வர்த்­த­கம், அனைத்­து­ல­க உள்­நாட்­டுப் பய­ணத் துறை­கள் ஆகி­ய­வற்­றில் இடை­யூ­று­கள் ஏற்­பட்­டுள்­ளன.