வாஷிங்டன்: அமெரிக்காவில் பொதுப் போக்குவரத்துச் சேவைகளிலும் உள்நாட்டில் பயணம் மேற்கொள்ளும் விமானங்களிலும் மக்கள் முகக்கவசம் அணிவதைக் கட்டாயப்படுத்தக்கூடாது என்ற மாவட்ட நீதிபதி ஒருவரின் தீர்ப்பை எதிர்த்து அந்நாட்டின் நீதித் துறை மேல்முறையீடு செய்துள்ளது. கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்த முகக்கவசம் அணிவது அவசியம் என்று அமெரிக்காவின் 'சிடிசி' எனும் நோய்க் கட்டுப்பாட்டு, தடுப்பு நிலையம் ஆலோசனை வழங்கியதைத் தொடர்ந்து மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
முகக்கவசம் அணிவதைக் கட்டாயமாக்குவது நோய்க் கட்டுப்பாட்டு, தடுப்பு நிலையத்திற்கு உள்ள அதிகாரத்தை மீறுவதாகும் என்று தீர்ப்பளித்த நீதிபதி கூறியிருந்தார்.
அதைத் தொடர்ந்து பல முக்கிய விமான நிறுவனங்கள் அந்த நிபந்தைனையை விலக்கின. 14 மாதங்களதாக நடப்பில் இருந்த அந்த நிபந்தனை தொடர்ந்து செயல்படுத்தப்படுவது அவசியம் என்று நோய்க் கட்டுப்பாட்டு, தடுப்பு நிலையம் நினைத்தால் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்யப்படும் என்று நீதித் துறை தெரிவித்திருந்தது.

