களேபரமான ஆஸ்திரேலியாவின் விமான நிலையங்கள்

சிட்னி: சுமார் ஈராண்­டு­க­ளுக்­குப் பிறகு ஆஸ்­தி­ரே­லி­யா­வில் மீண்­டும் பய­ணத் துறை சூடு­பி­டித்­துள்­ளால் ஈஸ்­டர் விடு­முறை காலத்­தில் அந்­நாட்­டின் விமான நிலை­யங்­களில் குழப்­பம் நில­வி­யுள்­ளது. நீண்ட இடை­வெ­ளிக்­குப் பிறகு பய­ணம் மேற்­கொள்ள பலர் திர­ளாக வந்­த­தால் இந்­நிலை உரு­வாகியுள்ளது.

ஆஸ்திரேலியாவில் ஈஸ்டர் பள்ளி விடுமுறை காலம் இந்த வாரம் நிறைவடைகிறது. அந்நாட்டின் ஆகப் பெரிய நகரங்களான சிட்னியிலும் மெல்பர்னிலும் உள்ள விமான நிலையங்களில் பயணிகள் நீண்ட நேரம் வரிசையில் நிற்க நேரிட்டது.

சென்ற வாரம் சிட்­னி­யின் உள்­நாட்டு விமான நிலை­யத்­தில் பெட்டி­க­ளைப் பெற்றுக்கொள்ள உருவான வரிசை விமான நிலை­யத்­திற்கு வெளியே இருக்கும் நடை­பா­தை­வரை நீண்­டது. மூன்று மணி­நே­ரத்­திற்கு மேல் வரி­சை­யில் நிற்­க­வேண்­டிய நிலை ஏற்­பட்­ட­தா­க­வும் சில பய­ணி­கள் தெரி­வித்­த­னர்.

சிட்னி உள்­நாட்டு விமான நிலை­யம் ஒரு­நா­ளைக்கு 80,000க்கும் அதி­க­மான பய­ணி­க­ளைக் கையாளும் என்று கணிக்­கப்­பட்டுள்ளது. 2020ஆம் ஆண்டு மார்ச் மாதத்­திற்­குப் பிறகு இந்த விமான நிலை­யம் இத்­தனை பயணி­க­ளைக் கையாள்­வது இதுவே முதல்­முறை.

எனினும், பயணிகளுக்கு இந்த ஆரவாரம் மோசமான அனுபவமாக அமைந்துள்ளது.

இதற்கிடையே, இந்த விவ­காரத்­தில் ஆஸ்­தி­ரே­லி­யா­வின் தேசிய விமான நிறு­வ­ன­மான 'குவான்­டாஸ்' வழங்­கும் சேவை­யில் பலர் அதி­ருப்தி அடைந்­துள்­ள­னர். இம்­மா­தம் ஏழாம் தேதி­யன்று 'குவான்­டாஸ்', பய­ணி­க­ளி­டம் மன்­னிப்­புக் கேட்டுக்­கொண்­டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!