அமெரிக்கருக்கு சீனாவில் மரண தண்டனை

அமெரிக்கருக்கு சீனாவில் மரண தண்டனை

1 mins read
7f10d5fc-6444-4f95-a907-38e41dfa473c
படம்: நிங்போ நீதிமன்றம் (சீனா) -

தம்முடைய காதலியைக் கொன்ற குற்றத்திற்காக அமெரிக்க ஆடவருக்கு சீனாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

‌ஷாதீத் அப்துல்மாட்டின் என்பவருக்கும் அவருடைய காதலிக்கும் வாக்குவாதம் மூண்டபோது, அவர் அந்தப் பெண்ணைக் கத்தியால் பலமுறை குத்தியதாகத் தெரிவிக்கப்பட்டது. மாண்டவரின் முகத்திலும், கழுத்திலும் பல வெட்டுக்காயங்கள் ஏற்பட்டன.

21 வயதான சென் என்று அழைக்கப்பட்ட பெண்ணும் ‌ஷாதீத்தும் 2019ஆம் ஆண்டு சந்தித்தனர். 2021ஆம் ஆண்டிலிருந்து அந்தப் பெண் பலமுறை தங்கள் உறவை முறிக்க முற்பட்டபோது, ‌ஷாதீத் அதை ஏற்கவில்லை.

2021ஆம் ஆண்டு ஜூன் மாதம் அவர்கள் இருவரும் கடைசியாகச் சந்திக்க ஒப்புக்கொண்டபோது, ஷாதீத் ஒரு கத்தியுடன் சென்னைப் பார்க்க சென்றுள்ளார்.

பலிவாங்கும் நோக்கில் அவர் கொலையைச் செய்ததாக நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இந்தச் சம்பவம் குறித்து அமெரிக்கத் தூதரகம் கருத்து தெரிவிக்கவில்லை.