கொரோனா தொற்றிய 505 நாள்களுக்குப் பிறகு ஆடவர் இறந்தார்

கொரோனா தொற்றிய 505 நாள்களுக்குப் பிறகு ஆடவர் இறந்தார்

1 mins read
1b7e1e83-c023-4dcb-952d-c491bb0d3187
பிரிட்டனில் பெண் ஒருவருக்கு அரசாங்க மருத்துவ ஊழியர் ஒருவர் தடுப்பூசியைப் போடுகிறார். பிரிட்டனில் கிருமி தொற்றி 505 நாள்களுக்குப் பின்னர் ஆடவர் ஒருவர் உயிர் இழந்தார். படம்: ஏஎஃப்பி -

பிரிட்டனில் ஓர் ஆடவர் கிட்டத்தட்ட 18 மாதங்கள் கொவிட்-19 தொற்றால் அவதிப்பட்ட பின்னர் உயிர் இழந்தார்.

கடந்த 2020ல் அவருக்கு கிருமித் தொற்று கண்டுபிடிக்கப்பட்டது.

ஆடவர் 505 நாள்கள் கழித்து உயிர் இழந்ததாக பிரிட்டனின் மெட்ரோ செய்தித்தாள் கூறியது.

கொவிட்-19 கிருமிப் பரவல் தொடங்கியதிலிருந்து, ஒருவருக்கு கிருமித்தொற்று ஆக நீண்டகாலம் பீடித்த சம்பவம் இது என்று மெட்ரோ கூறியது.

நோயாளியின் விவரங்களும் அவருக்குத் தடுப்பூசி போடப்பட்டதா என்பதும் வெளியிடப்படவில்லை.

ஆனால் அவரது எதிர்ப்பாற்றல் மிக மோசமாக பாதிக்கப்பட்டிருந்தது என்று மருத்துவர்கள் கூறினர்.

ஆல்ஃபா, காமா, ஓமிக்ரான் உள்ளிட்ட கொவிட்-19 கிருமியின் பத்து திரிபுகள் அந்த நோயாளியைத் தொற்றியதாகக் கூறப்பட்டது.

அந்தச் சம்பவம் பற்றி பிரிட்டிஷ் நிபுணர்க் குழு ஆராய்ந்து வருகிறது.

எச்ஐவி அல்லது பிற காரணங்களால் எதிர்ப்பாற்றல் குறைந்து மாண்டவர்களைப் பற்றி அந்தக் குழு ஆய்வு நடத்துகிறது.