வெளிநாட்டுப் பயணிகளை வரவேற்கிறது ஹாங்காங்

வெளிநாட்டுப் பயணிகளை வரவேற்கிறது ஹாங்காங்

1 mins read
f2fa527b-ee21-4752-8c4a-ece6c523095e
-

ஹாங்­காங்: கிரு­மிப் பர­வல் தொடங்­கிய ஈராண்­டு­களில் முதல்­மு­றை­யாக, வரும் மே மாதம் 1ஆம் தேதி முதல் வெளி­நாட்­டுப் பய­ணி­களை அனு­ம­திக்க ஹாங்­காங் முடிவு செய்­துள்­ளது.

கடு­மை­யான கட்­டுப்­பா­டு­க­ளைக் கடைப்­பி­டித்து வந்த ஹாங்­காங், அவற்­றைத் தளர்த்­தத் தொடங்­கி­உள்­ளது.

அங்கு அன்றாட தொற்று சம்­ப­வங்­கள் தற்­போது 1,000த்திற்­கும் குறை­வாக பதி­வா­கின்­றன.

வெளி­நாட்டுப் பய­ணி­கள், உள்­ளூர்­வா­சி­க­ளுக்­கான நடை­மு­றை­களைக் கடைப்­பி­டிக்க வேண்­டும் என்று கூறப்­பட்­டுள்­ளது.

சென்ற 1ஆம் தேதி முதல், அமெ­ரிக்கா, பிரிட்­டன் உள்­ளிட்ட ஒன்­பது நாடு­களில் இருந்து வரும் விமா­னங்­க­ளுக்கு ஹாங்­காங் அனு­மதி அளித்­தது. ஹாங்­காங் குடி­யி­ருப்­பா­ளர்­க­ளுக்­கான தனி­மைப்­படுத்­தல் காலம் 14லிருந்து 7 நாள்­களாக குறைக்­கப்­பட்­டது.

விமா­னங்­களில் வரும் அனு­ம­திக்­கப்­படும் தொற்று உறுதி செய்­யப்­ப­டு­ப­வர்­க­ளின் எண்­ணிக்கை மூன்­றில் இருந்து ஐந்­தாக உயர்த்தப்­பட்­டுள்­ளது.

ஐந்­துக்­கும் மேற்­பட்­ட­வர்­க­ளுக்கு தொற்று உறுதி செய்­யப்­பட்­டால், அந்த விமான நிறு­வ­னம், ஹாங்­காங்கிற்கு குறிப்­பிட்ட நாள்­க­ளுக்கு சேவையைத் தொடர முடி­யாது. இதற்­கி­டையே, 4 மாதங்­களுக்­குப் பிறகு, உடற்­ப­யிற்­சிக் கூடங்­கள், அழகு நிலை­யங்­கள் உள்ளிட்டவை நேற்று முன்­தி­னம் திறக்­கப்­பட்­டன.